1710. கடுத்த தோரரக் கன்கயி லைம்மலை எடுத்த தோள்தலை யிற்றல றவ்விரல் அடுத்த லும்மவ னின்னிசை கேட்டருள் கொடுத்த வன்குரங் காடு துறையனே. | |
| 11 |
| திருச்சிற்றம்பலம் |
|
| 11. பொ-ரை: குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் இறைவன், சினந்த தேரை உடைய இராவணனது, திருக்கயிலையை எடுக்கலுற்ற தோள்களும் தலையும் இற்று, அவன் அலறும்படியாகத் திருவிரலை அடுத்தவன்; பின் அவன் இன்னிசை கேட்டு அருள்கொடுத்தவன் ஆவன். |
| கு-ரை: கடுத்த - விரைவான். தலையிற்றலற -தலை நெரிந்தலற. விரல் அடுத்தலும் -விரல் ஊன்றலும். |
| உறையூர்ப் புராணம் | | கந்தைமிகை யாங்கருத்துங் கையுழவா ரப்படையுங் கவின்வெண் ணீறுஞ் சிந்தையிடை யறாவன்புஞ் சிவஞானம் பழுத்தொழுகு செய்யவாயுந் தந்தையொடு தாயிலான் றிருவடிதை வருமனமுந் தாரைக் கண்ணு நிந்தையறு முழுத்துறவு முடையபிரா னடிபணிந்து நீடு வாழ்வாம். | | -மீனாட்சி சுந்தரம்பிள்ளை | | | |