| 64. திருக்கோழம்பம் |
| பதிக வரலாறு: |
திருநாவுக்கரசர் வேள்விகுடி, எதிர்கொள்பாடி பணிந்து திருக்கோடிக்கா, ஆவடுதண்துறை இவற்றை வணங்கச் செல் பொழுதில் திருக்கோழம்பம் பணிந்து பரவியது இத்திருப்பதிகம். (தி. 12. திருநா.புரா . 190.) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:177 | பதிக எண்:64 |
| திருச்சிற்றம்பலம் |
1711. | வேழம் பத்தைவர் வேண்டிற்று வேண்டிப்போய் ஆழம் பற்றிவீழ் வார்பல வாதர்கள் கோழம் பத்துறை கூத்தன் குரைகழல் தாழும் பத்தர்கள் சாலச் சதுரரே. | |
| 1 |
1712. கயிலை நன்மலை யாளுங் கபாலியை மயிலி யல்மலை மாதின் மணாளனைக் | |
|
| 1. பொ-ரை: வேழம்பம் என்னும் விளையாட்டைப் புரிகின்ற ஐந்து புலன்களாகியவர்கள் விரும்பினவற்றையே தாமும் விரும்பிச் சென்று உலகியல் ஆழங்காற்பட்டுப் பல அறிவற்றவர்கள் வீழ்வர்; கோழம்பத்தில் உறைகின்ற கூத்தன் ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளை வணங்கும் பக்தர்களே மிகவும் திறம் உடையவர்கள். |
| கு-ரை: வேழம்பத்துஐவர் - உயிருக்கு ஏளனத்தைத் தரும் ஐம்பொறிகள். வேழம்பம் என்ற சொல்லுக்குக் கூத்து, ஏளனம், பரிகாசம் என்ற பொருள்கள் உள்ளன; ஏற்பன கொள்க. ஐவர் அர் விகுதி இழித்தற் பொருளில் வந்தது. வேண்டிற்று - விரும்பியதை. வேண்டிப்போய் - தானும் விரும்பிச் சென்று. ஆழம் பற்றி - துன்பப் படுகுழியினைப் பற்றி. ஆதர் - குருடர் அல்லது அறிவிலார். குரை - ஒலிக்கின்ற. தாழும் - வணங்கும். சால - மிக. சதுரர் - சதுரப் பாடுடையவர். |
| 2. பொ-ரை: திருக்கயிலாயத் திருமலையினை ஆள்கின்ற கபாலியும், மயிலியலை உடைய மலைமங்கையின் மணவாளனும் |