குயில்ப யில்பொழிற் கோழம்பம் மேயவென் உயிரி னைநினைந் துள்ளம் உருகுமே. | |
| 2 |
1713. வாழும் பான்மைய ராகிய வான்செல்வம் தாழும் பான்மைய ராகித்தம் வாயினால் தாழம் பூமணம் நாறிய தாழ்பொழில் கோழம் பாவெனக் கூடிய செல்வமே. | |
| 3 |
1714. | பாட லாக்கிடும் பண்ணொடு பெண்ணிவள் கூட லாக்கிடுங் குன்றின் மணற்கொடு | |
|
| ஆகிய, குயில் பயில்கின்ற பொழில்கள் உடைய கோழம்பத்தைப் பொருந்திய என் உயிர்போல்வானாகிய இறைவனை நினைந்து உள்ளம் உருகுகின்றது. |
| கு-ரை: கபாலி - பிரமகபாலத்தை ஏந்தியவன். மயிலியல் - மயிலின் சாயல்தன்மை. பயில் - தங்குகின்ற. உயிரினை - உயிராயிருப்பவனை. |
| 3. பொ-ரை: வணங்கும் தன்மையோடு கூடியவராகித் தம்வாயினால், தாழம்பூக்களின் மணம் வீசுகின்ற பொழிலை உடைய "கோழம்பத்தலத்து இறைவா!" என்று கூறியதனால் கூடும் செல்வமே, வாழும் தன்மையராகிப் பெற்ற உயர்ந்த செல்வம் ஆகும். |
| கு-ரை: தேவர் பெற்ற செல்வம் இறைவனைப் பாடிப் பணிந்து பெற்ற செல்வமேயாம் என்றது. வாழும் பான்மையராகி - பிறவியெடுத்தபயனை அடையும் குறிக்கோளோடு வாழும் தன்மையை உடையவராகி அல்லது வீடுபேற்றில் எஞ்ஞான்றும் வாழும் தன்மையை உடையவராகி. அவ்வான் செல்வம் - அவ்வுயர்ந்த வீட்டுநெறியாகிய செல்வத்தில். தாழும் - விரும்பும் அல்லது தங்கும்.பான்மையராகி - எண்ணத்தையுடையவராகி. தாழ்பொழில் - நீண்டபொழில். கோழம்பா - திருக்கோழம்பம் என்னும் தலத்தில் எழுந்தருளிய இறைவனே. கோழம்பா என அவ்வான் செல்வம் கூடிய செல்வம் ஆம் என வினை முடிவுசெய்க. |
| 4. பொ-ரை: வெண்கோடலும் செங்கோடலும் ஆகிய மலர்கள் பூத்து விளங்கும் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனாகிய |