கோடல் பூத்தலர் கோழம்பத் துள்மகிழ்ந் தாடுங் கூத்தனுக் கன்புபட் டாளன்றே. | |
| 4 |
1715. | தளிர்கொள் மேனியள் தான்மிக அஞ்சவோர் பிளிறு வாரணத் தீருரி போர்த்தவன் குளிர்கொள் நீர்வயற் கோழம்பம் மேவினான் நளிர்கொள் நீர்சடை மேலு நயந்ததே. | |
| 5 |
|
| இறைவனுக்கு இப்பெண் அன்றே அன்புபட்டாள் ஆதலின், பண்ணொடு கூடிய பாடல் ஆக்குவாள்; மணற்குன்றில் மணலினைக் கொண்டு கூடல் இழைப்பாள். |
| கு-ரை: பண்ணொடு பாடலாக்கிடும் - பண்ணோடு பாடச்செய்யும். கூடலாக்கிடும் - கூடல் விளைந்திடச்செய்யும். கூடல் - பெண்கள் தன் எண்ணம் நிறைவேறுமோ அன்றிப் பிறிதாமோ என அறிய நிலத்தில் கண்ணை மூடிக்கொண்டு வட்டமிட்டுப் பார்ப்பர். அச்சுழியின் இருமுனைகளும் கூடினால் வெற்றி என்றும் கூடாதொழியின் எண்ணம் பலியாதென்றும் கருதுவர். இதற்குக் கூடலிழைத்தல் என்று பெயர். குன்றின்மணற்கொடு - மலையத் தனை மணலைக் கொண்டு, கூடல் இழைத்திடும் என்க. மலையில் இருக்கும் மணல்களைத் தான் வாழ்வதற்கு இடமாகக்கொண்டு மலரும் கோடல் எனினுமாம். கோடல் - காந்தள். பூத்துஅலர் - பூத்து மலர்கின்ற. பெண்ணிவள் கோழம்பத்துக் கூத்தனுக்கு அன்பு பட்டாளல்லவா அவ்வன்பு, பாடல் கூடல் இவற்றை இவட்கு விளைத்திடும் எனமுடிவு செய்க. |
| 5. பொ-ரை: மாந்தளிரின் வண்ணம் கொண்ட மேனியளாகிய உமாதேவி மிக அஞ்சுமாறு ஒப்பற்ற பிளிறிவரும் யானையின் பச்சைத்தோலைப் போர்த்தவனாகிய, குளிர்ச்சிகொண்ட நீண்ட வயல்களையுடைய கோழம்பத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் செறிவினைக்கொண்ட கங்கையினைச் சடைமேலும் நயந்தது வியப்புக்குரியதே. |
| கு-ரை: தளிர்கொள்- தளிரின் நிறத்தைக்கொண்ட. பிளிறு வாரணம் - பிளிறித் தம்மை அடரவந்த யானை. ஈருரி - உரித்ததோல். நளிர் - குளிர்ந்த தன்மை. நீர் - கங்கை. மேலும் நயந்தது - அப்பெண்ணுக்கு மேலும் நயப்பை உண்டாக்கியது என்றோ அச்சடையின் மேலும் அவள் நயப்புச் சென்றதென்றோ கொள்க. |