1716. நாத ராவர் நமக்கும் பிறர்க்குந்தாம் வேத நாவர் விடைக்கொடி யார்வெற்பில் கோதை மாதொடுங் கோழம்பங் கோயில்கொண் டாதி பாத மடையவல் லார்களே. | |
| 6 |
1717. | முன்னை நான்செய்த பாவ முதலறப் பின்னை நான்பெரி தும்மருள் பெற்றது அன்ன மார்வயற் கோழம்பத் துள்ளமர் பின்னல் வார்சடை யானைப் பிதற்றியே. | |
| 7 |
|
| 6. பொ-ரை: வேதங்களை ஓதிய நாவை உடையவரும், இடபக்கொடியினரும், மலைமங்கையாகிய உமாதேவியோடும் கோழம்பத்திற் கோயில்கொண்ட ஆதியுமாகிய பெருமானின் பாதங்களை அடையவல்லவர்கள் தாம் நமக்கும் பிறர்க்கும் தலைவர் என்று மதிக்கத்தக்கவர்கள். |
| கு-ரை: நமக்கும் பிறர்க்கும் நாதராவர். கோதை மாது - மாலை சூடிய மங்கை. கோயில்கொண்ட ஆதி எனப் பிரிக்க. ஆதி - முதல்வன். கோழம்பம் அடையவல்லார்களே நாதராவர் என்க. |
| 7. பொ-ரை: அன்னம் பொருந்திய வயலை உடைய கோழம்பத்துள் அமர்ந்திருக்கின்ற பின்னிய நீண்டசடையானைப் பிதற்றியே, முன்பு நான் செய்த பாவம் முதல் அறும்படிப் பின்பு நான் பெரிதும் அருள்பெற்றது. |
| கு-ரை: முன்னை நான் செய்த பாவ முதல் - முற்பிறவியில் நான் செய்த பாவமாகிய முதல். அற - நீங்க. பின்னை - பின்னர்(இப்பிறவியில்). பெரிதும் - மிகுதியும். ஆர் - பொருந்திய. பின்னல் - முறுக்கிய. வார் - நீண்ட. பிதற்றியே - இறைவன் திருநாமத்தைப் பல காலும் சொல்லியேயாகும். |
| முற்பிறப்பில் செய்த பாவங்காரணமாக நான் சமணசமயம் சார்ந்ததும், பின்னர் அதனின் நீங்கிப் பெருமான் திருவருள் பெற்றதும் எல்லாம், அவன் திருப்பெயரைப் பலகாலும் ஓதிய காரணத்தால் ஆயின என்றார். |