1720. சமர சூரபன் மாவைத் தடிந்தவேற் குமரன் தாதைநற் கோழம்பம் மேவிய அமரர் கோவினுக் கன்புடைத் தொண்டர்கள் அமர லோகம தாளுடை யார்களே. | |
| 10 |
1721. | துட்ட னாகி மலையெடுத் தஃதின்கீழ்ப் பட்டு வீழ்ந்து படர்ந்துய்யப் போயினான் கொட்டம் நாறிய கோழம்பத் தீசனென் றிட்ட கீத மிசைத்த அரக்கனே. | |
| 11 |
| திருச்சிற்றம்பலம் |
|
| 10. பொ-ரை: போரெதிர்ந்துவந்த சூரபன்மனைக் கொன்ற வேற்படையை உடைய முருகவேளுக்குத் தந்தையும், நல்ல கோழம்பம் மேவிய தேவர்தலைவனும் ஆகிய பெருமானுக்கு அன்புடைய தொண்டர்கள், அமரலோகத்தை ஆளும் உரிமையுடையவராவர். |
| கு-ரை: சமரசூரபன்மா - போரிலே வல்ல சூரபன்மா என்ற அசுரன். தடிந்த - கொன்ற. வேல்குமரன் - வேலாயுதத்தை உடைய முருகன். தாதை - தந்தையாகிய சிவபெருமான். அமரர்கோ - தேவர்கள் தலைவனாகிய பெருமான். அன்புடைத் தொண்டர்கள் அமரலோகம் ஆளுதலை உடையவர்களாவர். |
| 11.பொ-ரை: கொட்ட நறுமணம் வீசுகின்ற கோழம்பத்து இறைவன் என்று விருப்பத்திற்குரிய கீதம் இசைத்த அரக்கன் துட்டனாகித் திருக்கயிலையை எடுக்கலுற்று, அம்மலையின் கீழ்ப்பட்டு விழுந்து படர்ந்து பின் உய்ந்தான். |
| கு-ரை: துட்டன் - துஷ்டன். அஃதின்கீழ் - அதன்கீழ். பட்டு - அகப்பட்டு. வீழ்ந்து - ஆணவம் வீழப்பெற்று. படர்ந்து - பெருமானைப் பற்றி. உய்யப்போயினான் - அநுக்ரகம் பெற்றான். கொட்டம் - மணப்பொருளில் ஒன்று. நாறிய - கமழ்கின்ற. என்றிட்ட கீதம் - என்று வரும் இசைப்பாடல். இசைத்த - பாடிய. |