1728. ஆதி நாதன் அமரர்க ளர்ச்சிதன் வேத நாவன்வெற் பின்மடப் பாவையோர் பாதி யானான் பரந்த பெரும்படைப் பூத நாதன்தென் பூவனூர் நாதனே. | |
| 7 |
1729. பூவ னூர்தண் புறம்பயம் பூம்பொழில் நாவ லூர்நள் ளாறொடு நன்னிலங் கோவ லூர்குட வாயில் கொடுமுடி மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே. | |
| 8 |
1730. | ஏவம் ஏது மிலாஅம ணேதலர் பாவ காரிகள் சொல்வலைப் பட்டுநான் தேவ தேவன் திருநெறி யாகிய பூவ னூர்புகு தப்பெற்ற நாளின்றே. | |
| 9 |
|
| 7. பொ-ரை: அழகிய பூவனூர் இறைவன் ஆதியில் தோன்றியவனும், தேவர்களால் அருச்சிக்கப்படுபவனும், வேதம் ஓதும் நாவினனும், மலைமங்கையை ஒரு பாதியிற் கொண்டவனும், பரவிய பெரும் படைக்கலங்களை உடைய பூதநாதனும் ஆவன். |
| கு-ரை: ஆதிநாதன் - முதன்மையான தலைவன். அர்ச்சிதன் அர்ச்சிக்கப்படுபவன். வேதநாவன் - வேதமோதும் திருவாயை உடையவன். வெற்பின் மடப்பாவை - இமயமலை அரசனின் புதல்வி. பசந்த - மிகுந்த. பூதப்படைநாதன் என்க. |
| 8. பொ-ரை: பூவனூரும், குளிர்ந்த புறம்பயமும் பூம்பொழில் சூழ்ந்த நாவலூரும், நள்ளாறும், நன்னிலமும், கோவலூரும், குடவாயிலும், கொடுமுடியும், மூவலூரும் ஆகிய அனைத்தும் முக்கண்ணன் ஊர்கள்; காண்பீர்களாக. மூவலூர் வைப்புத்தலம். |
| கு-ரை: பூவனூர் முதலாய ஊர்கள் முக்கண்ணனாகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர்கள் என்க. |
| 9. பொ-ரை: விதிவிலக்குகள் ஏதும் இல்லாத அமணர்களாகிய குற்றமுடையோரும்; பாவகாரிகளுமாகியோர் சொல் வலையிற் பட்டு நான் தேவதேவனாம் சிவபெருமானின் திருநெறியாகிய பூவனூர் புகப்பெற்ற நாள் இன்றேயாகும். |