பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)66.திருவலஞ்சுழி643

1737.
விண்ட வர்புர மூன்று மெரிகொளத்
திண்தி றற்சிலை யாலெரி செய்தவன்
வண்டு பண்முர லுந்தண் வலஞ்சுழி
அண்ட னுக்கடி மைத்திறத் தாவனே.

5

1738.

படங்கொள் பாம்பொடு பான்மதி யஞ்சடை
அடங்க வாழவல் லானும்பர் தம்பிரான்
மடந்தை பாகன் வலஞ்சுழி யானடி
அடைந்த வர்க்கடி மைத்திறத் தாவனே.

6

1739.

நாக்கொண் டுபர வும்மடி யார்வினை
போக்க வல்ல புரிசடைப் புண்ணியன்
மாக்கொள் சோலை வலஞ்சுழி யீசன்றன்
ஏக்கொ ளப்புர மூன்றெரி யானவே.

7


     5. பொ-ரை: பகைவர் புரங்கள் மூன்றையும் எரிதல் கொள்ளமிக்க திண்ணியவில்லினால் எரித்தவனாகிய, வண்டுகள் இசையென ஒலிக்கின்ற குளிர்ச்சி உடைய வலஞ்சுழியில் வீற்றிருக்கும் தேவதேவனுக்கு அடிமை செய்யும் திறத்து யான் ஆவன்.
     கு-ரை: விண்டவர் - அறத்தின் நீங்கியவர். மனம் பொருந்தாது நீங்கிய பகைவர். திண்டிறற்சிலை - திண்ணிய வலிமையோடு கூடிய இமயவில். முரலும் - ஒலிக்கும். அண்டன் - உலகங்களை உடையவன். அடிமைத்திறத்தாவன் - அடிமையாம் திறத்தை நான் அடைந்தவனாவேன். ஏ - அசை.
     6. பொ-ரை: படத்தைக்கொண்ட பாம்பினோடு நிலா தரும் மதியத்தையும் சடையில் அடங்குமாறு வைத்து வாழ வல்லானும், தேவர் தலைவனும், மங்கைபங்கனும் ஆகிய திருவலஞ்சுழி இறைவன் திருவடியை அடைந்தவர்க்கு அடிமைசெய்யும் திறத்து யான் ஆவன்.
     கு-ரை: பால்மதி - பால்போலும் வெள்ளிய சந்திரன். அஞ்சடை அடங்க - அழகிய சடையின்கண்ணே அடங்கியிருக்க. உம்பர்தம் பிரான் - தேவர்கள் தலைவன்.
     7. பொ-ரை: நாவினைக்கொண்டு இசை பாடித்தொழும் அடியார்களின் வினைகளைப் போக்கவல்ல முறுக்கமைந்த