1742. இலங்கை வேந்த னிருபது தோளிற நலங்கொள் பாதத் தொருவிர லூன்றினான் மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி வலங்கொள் வாரடி யென்றலை மேலவே. | |
| 10 |
| திருச்சிற்றம்பலம் |
|
| 10. பொ-ரை: இலங்கை வேந்தனாம் இராவணனது இருபது தோளும் இறும்படியாக நன்மைமிக்க திருவடியில் ஒரு விரலால் ஊன்றினானுக்குரிய, மலங்கு மீன்கள் பாய்கின்ற வயல் சூழ்ந்த திருவலஞ்சுழியை வலம் கொள்வார் திருவடிகள் என் தலையின் மேலன. |
| கு-ரை: இற - நொறுங்க. நலங்கொள் - பிறருக்கு நன்மை செய்யும் குணத்தைக் கொண்ட. மலங்கு - மீன் வகையில் ஒன்று. வலங்கொள்வார் -வலம்செய்வார். "திருவலஞ்சுழி வலங்கொடு பாதத்தால் சுழலு மாந்தர்கள் தொல்வினையதனொடு துன்பங்கள் களைவாரே" திருஞானசம்பந்தர் தேவாரம் (தி.2.ப.106.பா.9.) அருளியமையையும் காண்க. |
| திருக்குறுக்கைப் புராணம் | | இருளென்று சொலத்திரிவார் மனம்வேவ நீற்றறையு ளிருந்து முற்றேம் வெருளென்று துயர்க்கடலு ளவரழுந்தக் கருங்கடற்கண் மிசைமி தந்து மருளென்று மாறாத வெண்ணீறுங் கண்மணியு மைந்தெ ழுத்தும் பொருளென்று தெரிவித்த புண்ணியவா கீசர்பதம் போற்றி வாழ்வாம். | | -மீனாட்சி சுந்தரம்பிள்ளை | | | |