| 67. திருவாஞ்சியம் |
| பதிக வரலாறு: |
| திருச்சேறை, குடவாயில், நறையூர் முதலிய பல பதிகளை வணங்கித் திருவாஞ்சியம் அணைந்துதொழுது பாடி அருளியது இத்திருப்பதிகம். (தி.12.திருநா-புரா-216) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:180 | பதிக எண்:67 |
| திருச்சிற்றம்பலம் |
1743. | படையும் பூதமும் பாம்பும்புல் வாயதள் உடையுந் தாங்கிய உத்தம னார்க்கிடம் புடைநி லாவிய பூம்பொழில் வாஞ்சியம் அடைய வல்லவர்க் கல்லலொன் றில்லையே. | |
| 1 |
1744. பறப்பை யும்பசு வும்படுத் துப்பல திறத்த வும்முடை யோர்திக ழும்பதி கறைப்பி றைச்சடைக் கண்ணுதல் சேர்தரு சிறப்பு டைத்திரு வாஞ்சியஞ் சேர்மினே. | |
| 2 |
|
| 1. பொ-ரை: படைக்கலங்களும், பூதமும், பாம்பும், மான்தோல் உடையும் தாங்கிய உத்தமராகிய பெருமானுக்கு இடமாகிய, பக்கமெலாம் பொருந்திய பூம்பொழில் சூழ்ந்த திருவாஞ்சியத்தை அடையவல்லவர்களுக்கு ஒரு துன்பமும் இல்லை. |
| கு-ரை: படையும் - மழு, சூலம் முதலிய ஆயுதங்களையும். புல்வாய்அதள் - மான்தோல். தங்கிய - தரித்த. புடை நிலாவிய - ஊர்ப்புறங்களில் விளங்கிய. அல்லல் - துன்பம். |
| 2. பொ-ரை: பறவை வடிவாகிய யூபஸ்தம்பம் நட்டு ஓமம் செய்து பசுவினை வேட்டு வேள்வி செய்து மற்றும் பலதிறத்தை உடைய மறையவர்கள் வாழும் பதியாகியதும், களங்கமுடைய பிறையைச் சடையின்கண் வைத்த நெற்றிக்கண்ணராகிய சிவபிரான் சேரும் சிறப்புடையதுமாகிய திருவாஞ்சியம் சேர்வீராக. |