பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)67.திருவாஞ்சியம்647

1745.
புற்றில் ஆடர வோடு புனல்மதி
தெற்று செஞ்சடைத் தேவர்பி ரான்பதி
சுற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம்
பற்றிப் பாடுவார்க் குப்பாவ மில்லையே.

3

1746.

அங்க மாறும் அருமறை நான்குடன்
தங்கு வேள்வியர் தாம்பயி லுந்நகர்
செங்கண் மாலிட மார்திரு வாஞ்சியம்
தங்கு வார்நம் அமரர்க் கமரரே.

4

1747.

நீறு பூசி நிமிர்சடை மேற்பிறை
ஆறு சூடும் அடிக ளுறைபதி
மாறு தானொருங் கும்வயல் வாஞ்சியம்
தேறி வாழ்பவர்க் குச்செல்வ மாகுமே.

5


     கு-ரை: பறப்பை - கருடன் முதலிய பறவை வடிவம் பொறித்த வேள்வித்தூண். நெய் வைக்கும் பாத்திரம் எனலுமாம். பசு - வேள்விப் பசு. படுத்து - சிறந்த பொருளாகக்கொண்டு நிகழ்த்தி. வேள்வித் தீயின் கண் நெய்யைச் சொரிந்தும், வேள்விச் சாலையின்கண் பசுவுக்கு வாயுறை கொடுத்தும் ஆராதித்தும் செய்யும் வேள்விச் செயல்களை உடையோர் வாழும் ஊர் எனக் குறித்தது. பல திறத்தவும் உடையோர் - பல வேள்விக் கூறுபாடுகளையும் உடையவர்கள். "பறப்பைப் படுத் தெங்கும் பசுவேட்டெரியோம்பும் சிறப்பர் வாழ்வதில்லை" (தி.1.ப.80.பா.2) என்றார் சம்பந்தரும். கறைப்பிறை - கறையை உடைய பிறைமதி. கண்ணுதல் - நெற்றிக் கண்ணை உடையவனாகிய பெருமான்.
     3. பொ-ரை: புற்றில் ஆடும் இயல்புடைய பாம்பினோடு கங்கையும், பிறையும் பொருந்திய செஞ்சடையுடைய தேவர் தலைவன் திருப்பதியாகியதும், சுற்றிலும் மாடங்கள் சூழ்ந்ததுமாகிய திருவாஞ்சியத்தைப்பற்றிப் பாடுபவர்களுக்குப் பாவங்கள் இல்லை.
     கு-ரை: ஆடரவு - ஆடுகின்ற பாம்பு. ஆடரவு - வினைத்தொகை; காலம் மூன்றிற்கும் பொது. புனல் - கங்கை. தெற்றும் - பொருந்திய. பற்றி - அடைந்து.
     4. பொ-ரை: நம் தேவதேவராகிய இறைவர், ஆறங்கங்களும் நால்வேதங்களும் தங்குகின்ற வேள்வியுடைய அந்தணர்கள் பயிலும்