1748. அற்றுப் பற்றின்றி யாரையு மில்லவர்க் குற்ற நற்றுணை யாவா னுறைபதி தெற்று மாடங்கள் சூழ்திரு வாஞ்சியம் கற்றுச் சேர்பவர்க் குக்கருத் தாவதே. | |
| 6 |
|
| நகராகிய திருவாஞ்சியத்தில், சிவந்த கண்ணையுடைய திருமாலை இடப்பாற்கொண்டு தங்குவார். |
| கு-ரை: அங்கமாறு - வேதாங்கங்கள் ஆறு. அவையாவன சிக்ஷை, வியாகரணம், நிருத்தம் முதலியன. அருமறை - உணர்தற்கரிய ருக், யசுர், சாமம், அதர்வணம். தங்கு - பொருந்திய. பயிலும் - எழுந்தருளியிருக்கும். செங்கண்மால் - சிவந்த கண்ணையுடைய திருமால். அமரர்க்கு அமரர் - தேவர்க்குத் தேவர். |
| 5. பொ-ரை: திருநீறு பூசி நிமிர்ந்த சடையின்மேல் பிறையும் கங்கையும் சூடும் பெருமான் உறையும் பதியாகியதும், களைகளாகிய பிரம்பு முதலியவை ஒருங்கும் வயல் வளமுடைய திருவாஞ்சியத்தைத் தெளிந்து வாழ்பவர்க்குச் செல்வம் பெருகும். |
| கு-ரை: மாறுதான் ஒருங்கும் வயல் - நெற் பயிர்களுக்கு மாறாகிய களைகள் அழிந்து குறையும் வயல்கள். தேறி - தெளிந்து. |
| 6. பொ-ரை: பாசக்கட்டுகள் நீங்கிப் பற்று என்பதொன்றும் இன்றி யாரையும் இல்லாதவர்க்குப் பொருந்திய நல்ல துணைவனாகிய பெருமான் உறையும் பதியாகியதும், விண்ணைத் தெற்றுகின்ற மாடங்கள் சூழ்வதுமாகிய திருவாஞ்சியத்தைக் கற்றுச் சேரும் அடியார்களுடைய கருத்தாவான் இறைவன். |
| கு-ரை: அற்று - ஆசையற்று. பற்றின்றி - ஆசை சிறிதேனுமில்லாமல். பற்று இன்றி அற்று எனமாற்றி ஆசை சிறிதும் இல்லாமல் விடுத்து என்றலுமொன்று. யாரையும் இல்லவர்க்கு - யாரையும் இல்லாத முற்றத்துறந்த துறவியர்க்கு. உற்ற - பொருந்திய. உறைபதி - உறைகின்ற தலம். தெற்று - கட்டப்பட்ட. கற்றுச் சேர்பவர்க்கு - இறைவன் திருப்பெயர்களைக்கற்று அடைய வல்லவர்களுக்கு. கருத்தாவது - அறிதற்குரிய கருத்துப் பொருளாவதாகும். |