பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)67.திருவாஞ்சியம்649

             * * * * * * * * * * * * * * * * *

7,8,9

1749.
அருக்க னங்கி யமனொடு தேவர்கள்
திருத்துஞ் சேவடி யான்றிக ழுந்நகர்
ஒருத்தி பாக முகந்தவன் வாஞ்சியம்
அருத்தி யாலடை வார்க்கில்லை யல்லலே.

10

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: சூரியனும், அக்கினியும், யமனும், பிற தேவர்களும் திருத்தி அணிசெய்கின்ற சேவடியான் திகழும் நகரமாகியதும், மங்கையை ஒருபங்கிற் கொண்டு மகிழ்ந்தவனுடையதுமாகிய திருவாஞ்சியத்தை விருப்பத்தினால் அடைவார்க்கு அல்லல் இல்லை.
     கு-ரை: அருக்கன் - சூரியன். அங்கி - அக்கினி. திருத்தும் - அவர்களைத் தவறு நீக்கித் திருத்தும். அருத்தி - ஆசை. அல்லல் - துன்பம்.

தனியூர்ப்புராணம்

முகத்தின்மண் முழுதிடந்து முன்னவன் பாதங் காணா
னகத்தினா ணடைய வங்கை யலர்நெறி யுழவா ரத்தி
னிகத்தின்மண் மேலி டந்தவ் விறையடி தலைமேற் சூட்டச்
சுகத்தினல் லூரிற் பெற்ற தூயரைத் துதித்து வாழ்வாம்.

-மீனாட்சி சுந்தரம்பிள்ளை

சூத சங்கிதை

பரசிவமென் றடியவரைப் பகருமறை
   களிதூங்கப் பலரும் போற்றப்
பிரசநறுங் கடுக்கைமுடி யப்பரன்போல்
   விடநுகர்ந்து பெயராச் சீற்றப்
புரிசைநெடுங் களிற்றினைவென் றெழுவிடைவென்
   முழுவிடைசூல் பொலியக் கொண்ட
வாரசுதிருப் பாதமலர் பரசுபுமெய்ப்
   போதமூறீஇ யமைந்து வாழ்வாம்.

-தே. ராசுப் பிள்ளை