| 68. திருநள்ளாறு |
| பதிக வரலாறு: |
| தென்புகலூர் மேவியதேனைச் செந்தமிழ் பாடிச் செங்காட்டங்குடி பணிந்து திருநள்ளாற்றிறைவரைத் தொழுது பாடியது இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.240.) |
| திருக்குறுந்தொகை |
| ப.தொ.எண்:181 | பதிக எண்:68 |
| திருச்சிற்றம்பலம் |
1750. | உள்ளா றாததோர் புண்டரி கத்திரள் தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக் கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை நள்ளா றாவென நம்வினை நாசமே. | |
| 1 |
1751. ஆர ணப்பொரு ளாமரு ளாளனார் வார ணத்துரி போர்த்தம ணாளனார் | |
|
| 1. பொ-ரை: உள்ளே தன் நிறம் கெடாததாகிய ஒப்பற்ற தாமரைத் தொகுதியின் தெளிவு நீங்காததாகிய சிவ ஒளிப் பிழம்பினை, தேன் நீங்காத பொன்போன்ற கொன்றைகமழும் சடையினை உடைய "நள்ளாறா!" என்று கூற நம் வினைகள் நாசமாகும். |
| கு-ரை: அகத்தே உள்ள ஆதாரங்களில் நீங்காத தாமரைகளின் தெளிவாகக் காணப்படுகின்ற சிவசோதி. உள் ஆறாததோர் புண்டரிகத்திரள் - "ஊறுமருவிய உயர்வரை உச்சிமேல் ஆறின்றிப்பாயும் அருங்குள மொன்றுண்டு சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்பூவின்றிச் சூடான் புரிசடையோனே" (தி.10.திருமந்திரம்). ஏனைத் தாமரைபோல் நீர்க்கீழ்த்தோன்றாத பீசம்முதலாகத் தோன்றி முளைத்த ஒப்பற்ற வெண்டாமரை. புண்டரிகத்திரள் - தாமரையின் தன்மைகள் எல்லாம் திரட்டித் தன்னுட்கொண்டது. தெள்ளாறாச் சிவசோதி - தெளிந்த சிவஞானத்தின் வழிகாணும் சிவமாகியப் பேரொளிப் பிழம்பு. கள் அறாத கொன்றை என்க. |
| 2. பொ-ரை: திருமால் பொருந்தி ஏத்துகின்ற நள்ளாற்று இறைவர், வேதத்தின் பொருளாக விளங்கும் அருளை ஆள்பவர்; |