பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)68.திருநள்ளாறு651

நாரணன் நண்ணி யேத்துநள் ளாறனார்
கார ணக்கலை ஞானக் கடவுளே.

2

1752.

மேகம் பூண்டதோர் மேருவிற் கொண்டெயில்
சோகம் பூண்டழல் சோரத்தொட்டான் அவன்
பாகம் பூண்டமால் பங்கயத் தானொடு
நாகம் பூண்டுகூத் தாடுநள் ளாறனே.

3

1753.

மலியுஞ் செஞ்சடை வாளர வம்மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்


யானையின் தோலைப் போர்த்த மணவாளர்; எல்லாவற்றுக்கும் மூலகாரணமாகிய கலைஞானக்கடவுள் ஆவர்.
     கு-ரை: ஆரணம் - வேதங்களின் தொகுதி. ஆரணப்பொருளாம் அருளாளனார் - வேதப் பொருளாய்விளங்கும் கருணையாளர். வாரணத்து உரி - யானையினது தோல். நாரணன் - திருமால். நண்ணி - சென்றடைந்து. காரணன் - எல்லாவற்றிற்கும் நிமித்த காரணன். கலைஞானக் கடவுள் - கலைஞானம் தரும் கடவுள் என்க. அல்லது அவற்றிற்குப் பொருளாயுள்ள கடவுள் எனலுமாம்.
     3.பொ-ரை: மேகத்தினைத் தன் உச்சியிற் கொண்டதாகிய மேருமாமலையாகிய வில்லைக்கொண்டு, முப்புரங்களும் சோகம் பூணுமாறு கனல் சோரத் தொட்டவனாகிய அவன், தன்னொரு பாகத்திற்கொண்ட திருமாலும், நான்முகனும் வழிபடுமாறு நாகம் பூண்டு கூத்தாடும் நள்ளாற்று இறைவன்.
     கு-ரை: மேகம் பூண்டதோர் மேரு வில் - மேகங்கள் வந்து படியும் இமயமலையாகிய வில். எயில் - திரிபுரம். சோகம் பூண்டு - துன்பம் மேற்கொண்டு. அழல்சோர- நெருப்புப்பற்ற. தொட்டான் - எய்தான். பாகம் பூண்டமால் - இடப்பாகத்தே உறையும் திருமால். திருமாலை இடப்பாகத்தே மனைவியாகக் கொண்டவன் என்றபடி. ஹரி அர்த்தர் என்ற சிவமூர்த்தம் குறித்தவாறு. பங்கயத்தான் - பிரமன். திருமால் பிரமரோடு நாகம் அணிந்து கூத்தாடும் நள்ளாறன் என்க.
     4. பொ-ரை: செஞ்சடையில் மலிந்த பாம்பினோடு பொலிகின்ற கங்கையை வைத்த புனிதனாராகிய கூற்றுவனை நலிந்த நள்ளாறரது அருளாற்றலையும் கண்டு இறுமாந்து மகிழ்வேன்.