பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)68.திருநள்ளாறு653

1756.
வஞ்ச நஞ்சிற் பொலிகின்ற கண்டத்தர்
விஞ்சை யிற்செல்வப் பாவைக்கு வேந்தனார்
வஞ்ச நெஞ்சத் தவர்க்கு வழிகொடார்
நஞ்ச நெஞ்சர்க் கருளுநள் ளாறரே.

7

1757.

அல்ல னென்று மலர்க்கரு ளாயின
சொல்ல னென்றுசொல் லாமறைச் சோதியான்
வல்ல னென்றும்வல் லார்வளம் மிக்கவர்
நல்ல னென்றும்நல் லார்க்குநள் ளாறனே.

8


     கு-ரை: செக்கர் அங்குஅழி - செவ்வானத்தின் நிறம் அவ்விடத்து அழிந்து தோன்ற. நக்கர் - நகுதற்குரிய வேடமுடையவர். அங்கு அரவு ஆர்த்த நாதனார் என்க. வக்கரன் விருத்தசர்மனுக்கு சைதேவன் தங்கையாகிய சுருததேவியிடம் பிறந்தவன். இவனும் சிசுபாலனும் சனகசனந்தனர் சாபம் பெற்ற ஜயவிஜயர்களுடைய அவதாரம். இவன் வலிமையடக்கப்பெற்றுக் கிருஷ்ணனால் கொல்லப்பட்டவன். வவ்விய - கொன்ற. மாயன் - திருமால்.
     7.பொ-ரை: நைந்த உள்ளம் உடையவர்களுக்கு அருளும் நள்ளாற்று இறைவர் வஞ்சனைமிக்க நஞ்சினாற் பொலிகின்ற திருக்கழுத்தினர்: தெய்வச் செல்வப்பாவையாகிய உமா தேவிக்கு வேந்தர்: வஞ்சனை உடைய நெஞ்சத்தவர்களுக்கு வழி கொடாதவர்.
     கு-ரை: வஞ்சம் - கொல்லும் தன்மையாகிய வஞ்சனையை உடைய. நஞ்சிற் பொலிகின்ற - விடத்தினாலே விளங்குகின்ற. விஞ்சையில் - வியத்தகு செயல்களினால் விளங்கும். செல்வப் பாவை - ஞானச் செல்வியாகிய சிற்சத்தி. வேந்தனார் - கணவர். நஞ்ச - நைந்த; நைஞ்ச என்றாய் நஞ்ச என மருவியது. அன்பினால் உருகில் நஞ்சு போன்ற கொடிய மனத்தவர்க்கும் அருள் செய்யும். உம்மை தொக்கது.
     8. பொ-ரை:அலர்க்கு அல்லன் என்றும், அருளாயின சொல்லன் என்றும், சொல்லாமறைச் சோதியானாகிய வல்லன் என்றும் துதிக்க வல்லவர் வளம் மிக்கவராவர். அத்தகைய நல்லார்க்கு நள்ளாறன் என்றும் நல்லன்.
     கு-ரை: அலர்க்கு அல்லன் - நல்லரல்லாதார்க்கு அல்லாதவன். அருளாயின சொல்லன் - அருளுபதேசம் செய்பவன். சொல்லாம்