பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)69.திருக்கருவிலிக்கொட்டிட்டை655

69. திருக்கருவிலிக்கொட்டிட்டை

பதிக வரலாறு:
     ஞானவரசு திருப்பழையாறை வடதளி வணங்கித் திருவானைக்காவிற்குச் செல்பொழுதில் பொன்னியின் இருமருங்கும் உள்ள சிவதலங்களைப்பாடிப் பரவியவற்றுள் ஒன்று இத்திருப்பதிகம். (தி.12.திருநா.புரா.301.)

திருக்குறுந்தொகை

ப.தொ.எண்:182

பதிக எண்:69

திருச்சிற்றம்பலம்

1760.

மட்டிட் டகுழ லார்சுழ லில்வலைப்
பட்டிட் டுமயங் கிப்பரி யாதுநீர்
கட்டிட் டவினை போகக் கருவிலிக்
கொட்டிட் டையுறை வான்கழல் கூடுமே.

1

1761.
ஞாலம் மல்கு மனிதர்காள் நாடொறும்
ஏல மாமல ரோடிலை கொண்டுநீர்
கால னார்வரு தன்முன் கருவிலிக்
கோல வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

2


     1. பொ-ரை: தேனையுடைய மலர்களைவைத்துச் சூடிய கூந்தலை உடைய பெண்களாகிய சுழலின் வலைப்பட்டு மனம் மயங்கிப் பின் இரங்காமல், நீர் உம்மைக் கட்டிய வினைகள் போக. கருவிலிக்கொட்டிட்டை உறையும் பெருமான் திருவடிகளைக் கூடுவீராக.
     கு-ரை: மட்டிட்ட - தேன் பொருந்திய; மலர்களை அணிந்த எனக் கூட்டுக. குழலார் - கூந்தலையுடையவர். சுழலில் - ஆசைச்சுழலாகிய. வலைப்பட்டு - வலையின்கண்ணே அகப்பட்டு. பரியாது - வருந்தாது. கட்டிட்ட - பந்தித்துநின்ற. கூடும் - சேருங்கள்.
     2. பொ-ரை: உலகில் நிறைந்த மனிதர்களே! நாள்தோறும் சிறந்த மலர்களோடு பச்சிலைகளையும் பொருந்துமாறு கொண்டு, நீர்