பக்கம் எண் :

656திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1762.
பங்க மாயின பேசப் பறைந்துநீர்
மங்கு மாநினை யாதே மலர்கொடு
கங்கை சேர்சடை யான்றன் கருவிலிக்
கொங்கு வார்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

3

1763.

வாடி நீர்வருந் தாதே மனிதர்காள்
வேட னாய்விச யற்கருள் செய்தவெண்
காட னாருறை கின்ற கருவிலிக்
கோடு நீள்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

4

1764.

உய்யு மாறிது கேண்மி னுலகத்தீர்
பைகொள் பாம்பரை யான்படை யார்மழுக்


உமக்குக் கூற்றுவன் வருவதன் முன்பே அழகு மிக்க நெடிய பொழில்கள் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
     கு-ரை: ஞாலம் - உலகம். ஏலமாமலர் - பொருந்திய சிறந்த பெரிய மலர். இலை - பச்சிலைகள். காலனார் வருமுன் - இறக்குமுன்.
     3. பொ-ரை: குற்றமுடையவற்றைப் பேசுதலால், நீர் மங்குமாற்றை நினையாமல் மலர்களைக்கொண்டு, கங்கை சேர்ந்த சடையானுக்குரிய மணம் மிக்க நெடிய பொழில்களை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
     கு-ரை: பங்கம் - பயனற்றவை. பறைந்து - மனம் வருந்தி. மங்குமா - மனஎழுச்சி குன்றுமாறு. கொங்குவார் பொழில் - தேன் நிறைந்த நீண்ட சோலை.
     4. பொ-ரை: மனிதர்களே!நீர் துன்பங்களால் வாடிவருந்தாமல் அருச்சுனனுக்கு வேடனாய்வந்து அருள்செய்த திருவெண்காடனார் உறைகின்ற கிளைகள் நீண்ட பொழிலை உடைய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
     கு-ரை: விசயற்கு - அருச்சுனனுக்கு. கோடுநீள் - மரக்கொம்புகள் நீண்டுள்ள. அடியாரிடர் தீர்க்க இறைவன்தானே வரும் என்பது குறிப்பு.
     5. பொ-ரை: உலகத்தில் உள்ளவர்களே! இதுவே உய்யும்வழி; கேட்பீராக; படம்கொண்ட பாம்பை அரையின்கண் அணிந்தவனும்,