பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)69.திருக்கருவிலிக்கொட்டிட்டை657

கையி னானுறை கின்ற கருவிலிக்
கொய்கொள் பூம்பொழிற் கொட்டிட்டை சேர்மினே.

5

1765.

ஆற்ற வும்அவ லத்தழுந் தாதுநீர்
தோற்றுந் தீயொடு நீர்நிலந் தூவெளி
காற்று மாகிநின் றான்றன் கருவிலிக்
கூற்றங் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்மினே.

6

1766.

நில்லா வாழ்வு நிலைபெறு மென்றெண்ணிப்
பொல்லா வாறு செயப்புரி யாதுநீர்
கல்லா ரும்மதில் சூழ்தண் கருவிலிக்
கொல்லே றூர்பவன் கொட்டிட்டை சேர்மினே.

7


மழுப்படை பொருந்திய கையை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற, கொய்து கொள்ளத்தக்க பூக்களை உடைய பொழில் சூழ்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
     கு-ரை: பை - படம். பாம்பு அரையான் - பாம்பை இடையிலே கட்டியவன். மழுப்படையார் கையினான் என்க. படை - ஆயுதம். கொய்கொள் - கொய்தலைக்கொண்ட. மலர்களையும், இலைகளையும் பறித்தலைக் கொய்கொள் என்றார்.
     6. பொ-ரை: நீர், மிகவும் துன்பத்தில் அழுந்தாமல், தோற்றுகின்ற தீ, நீர், நிலம், விசும்பு, காற்று ஆகி நின்றவனும், கூற்றுவனைக் காய்ந்தவனும் ஆகிய பெருமானுக்குரிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.
     கு-ரை: ஆற்றவும் - மிகவும். அவலத்து - துன்பத்து. நீர் - நீங்கள். தோற்றும் - விறகு முதலியவற்றால் வெளிப்படுத்தப்படும். காய்ந்தவன் - சினந்தவன்.
     7. பொ-ரை: நில்லாத வாழ்வு நிலைபெறும் என்று எண்ணிப் பொல்லா நெறியின்கண் வினைகளைச் செய விரும்பாது, நீர், கல்லால் நிறைந்த மதில் சூழ்ந்து தண்ணியதும் கொல்லேறாகிய இடபத்தினை ஊர்வானுக்குரியதும் ஆகிய கருவிலிக் கொட்டிட்டையைச் சேர்வீராக.