பக்கம் எண் :

658திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்(ஐந்தாம் திருமுறை)

1767.
பிணித்த நோய்ப்பிற விப்பிரி வெய்துமா
றுணர்த்த லாமிது கேண்மி னுருத்திர
கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக்
குணத்தி னானுறை கொட்டிட்டை சேர்மினே.

8

1768.

நம்பு வீரிது கேண்மின்கள் நாடொறும்
எம்பி ரானென் றிமையவ ரேத்துமே
கம்ப னாருறை கின்ற கருவிலிக்
கொம்ப னார்பயில் கொட்டிட்டை சேர்மினே.

9


     கு-ரை: நில்லா - நிலையில்லாத. பொல்லா ஆறு - தீயவழி. புரியாது - விரும்பி எப்பொழுதும் செய்யாது. கல்லாரும் மதில் - கற்களால் கட்டப்படுதலைப் பொருந்திய மதில். கொல்லேறு - கொம்பினால் கொல்லத்தக்கதாகிய சினவிடை.
     8. பொ-ரை: உம்மைப் பிணித்துள்ள துன்பம் நிறைந்த பிறவிப் பிரிவெய்தும் நெறியை உணர்த்தலாகின்ற இதனைக் கேட்பீராக! உருத்திரகணத்தினார் தொழுதேத்துவதும், எண்குணத்தினான் உறைவதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
     கு-ரை: பிணித்த - நம்மைப் பிணித்து நிற்கின்ற நோய்ப் பிறவி - பிறவியாகியநோய்; அல்லது நோயும் பிறவியும். பிரிவெய்து மாறு - நீங்கும்படி. உணர்த்தலாம் - பிறவி என்னை விட்டு நீங்க ஆணையிட்டு உணர்த்தலாம். நீங்கள் பிறப்பு நீங்குதலோடு பிறர்க்கும் உணர்த்தலாம். உருத்திரகணத்தினார் - சிவகணங்கள்; அடியார் கூட்டம். குணத்தினான் - நற்குணங்களின் வடிவாயிருப்பவன். சேர்வீராயின் நீங்கள் பிறவிநோயில் நீங்குதல் மட்டுமின்றிப் பிறர்க்கும் பிறவியை நீக்கும் ஆசாரியத் தலைமையைப் பெறுவீர்கள் என்றபடி. "ஒரு நீயாகித் தோன்றப் பெறலரும் பரிசில் நல்கும்" என்பது திருமுருகாற்றுப்படை.
     9. பொ-ரை: மனிதர்களே! நான் சொல்லும் இதனை நம்பிக் கேட்பீராக; நாள்தோறும் தேவர்கள் 'எம்பெருமான்!' என்று ஏத்தும் ஏகம்பத்து இறைவனார் உறைகின்றதும், பூங்கொம்பு போன்ற பெண்கள் பயில்வதும் ஆகிய கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.