பக்கம் எண் :

(ஐந்தாம் திருமுறை)69.திருக்கருவிலிக்கொட்டிட்டை659

1769.
பாரு ளீரிது கேண்மின் பருவரை
பேரு மாறெடுத் தானை யடர்த்தவன்
கார்கொள் நீர்வயல் சூழ்தண் கருவிலிக்
கூர்கொள் வேலினன் கொட்டிட்டை சேர்மினே.

10

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: நம்புவீர் - உறுதியைக் கேட்டுணரும் விருப்பமுடையீர். நம்பு - விருப்பம். எம்பிரான் - எமது தலைவன். ஏத்தும் - வணங்கும். கம்பனார் - திரு ஏகம்பத்துறையும் பெருமானார். கம்பன் - பிறருக்கு நடுக்கத்தைச் செய்வன். கொம்பனார் - பூங்கொடி போன்ற அழகிய பெண்கள்.
     10. பொ-ரை: உலகிலுள்ளவர்களே! இது கேட்பீராக! பெரிய திருக்கயிலாய மலையைப் பேருமாறு எடுக்கலுற்ற இராவணனை அடர்த்தவனும் கூர்மைகொண்ட வேலை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கருமையைக் கொண்ட நீர் நிறைந்த வயல் சூழ்ந்த குளிர்ந்த கருவிலிக்கொட்டிட்டையைச் சேர்வீராக.
     கு-ரை: பாருளீர் - உலகின்கண் உள்ளவர்களே! பருவரை - பெரிய மலை. பேருமாறு - பெயரும்படி. கார்கொள் நீர் - கருமை நிறத்தைக் கொண்ட தண்ணீர். இராவணனுக்கு அருள் செய்தது உலக மறிந்த நிகழ்ச்சியாகலின் பாருளீர் இதுகேண்மின் என விளித்தார்.

திருநாவுக்கரசர் புராணம்

திருநாவுக் கரசுவளர்
   திருத்தொண்டி னெறிவாழ
வருஞானத் தவமுனிவர்
   வாகீசர் வாய்மைதிகழ்
பெருநாமச் சீர்பரவ
   லுறுகின்றேன் பேருலகி
லொருநாவுக் குரைசெய்ய
   லொண்ணாமை யுணராதேன்.

-தி.12.சேக்கிழார்.