| சிந்தைகாண் சிந்தாத சித்தத் தார்க்குச் | | | சிவனவன்காண் செங்கண்மால் விடையொன் றேறும் | | | எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி | | | ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே. | 9 |
| 2745. | பொன்னிசையும் புரிசடையெம் புனிதன் தான்காண் | | | பூதகண நாதன்காண் புலித்தோ லாடை | | | தன்னிசைய வைத்தஎழி லரவி னான்காண் | | | சங்கவெண் குழைக்காதிற் சதுரன் தான்காண் | |
தந்தையாய், பணிந்து தன் திருவடிகளை வணங்கும் அடியவர்களுக்கு அவர்கள் சிந்தையில் அகப்படுபவனாய், புறப்பொருள்கள் மாட்டுச் செல்லாத உள்ளத்தாருக்கு இன்பவடிவினனாய், செங்கண்ணனாகிய திருமாலைக் காளையாகக் கொண்டு இவரும் எம் தலைவனாய் உள்ள எழில் ஆரும் பொழில் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே. கு-ரை: முந்தை - யாவரினும் முற்பட்டவன். மூவரினும் - 'அயன் அரி அரன்' என்னும் மூவருள்ளும். முதல் ஆனான். தலைவன் ஆகியவன்; உம்மை, "முரசு முழங்கு தானை மூவருள்ளும்" (புறம் - 35) என்புழிப்போல, முற்று. தண்கட மா - குளிர்ந்த மதநீரை யுடைய விலங்கு; யானை. "அடியே" என்னும் ஏகாரம், 'தன் திருவடியையே' எனப் பிரிநிலை சிந்தைக்கு அகப்படுபவனை, 'சிந்தை' என்றருளினார்; 'சிந்திதன்' என்றபடி; எனவே, 'ஏனையோர்க்கு அசிந்திதன்' என்றதாம். சிந்தாத - சிதறாத; புறத்துச் செல்லாத, சிவன் - இன்ப வடிவினன்; "அவன்", பகுதிப்பொருள் விகுதி. மால், பெருமை எனக் கொண்டு "செங்கண்' என்றதனை விடைக்கு அடையாக்கினும், அன்றி, 'திருமால்' எனக்கொண்டு அவனுக்கே அடையாக்கினும் பொருந்தும். விடைக்குக் கொள்ளின் இன அடையாம். 10. பொ-ரை: பொன்போன்ற ஒளிவீசும் முறுக்கேறிய சடையை உடைய எம் தூயோனாய், பூதகணத் தலைவனாய், புலித்தோலாகிய ஆடையின் மேல் இறுக்கிச் சுற்றிய அழகிய பாம்பினை உடையவனாய், காதில் சங்கினாலாகிய குழையை அணிந்த திறமை உடையவனாய், மின்னலைப் போல ஒளி வீசும் வெள்ளிய பற்களை உடைய இராவணன், கோபம் கொண்டு கயிலை மலையை அசைக்கத் தன் திருவடி அவனை நசுக்க, பின்னர் அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட இனிய இசையைக் கேட்டு, அவனுக்குச்
|