பக்கம் எண் :

999
 
2743.தொண்டுபடு தொண்டர்துயர் தீர்ப்பான் தான்காண்

தூமலர்ச்சே வடியிணையெம் சோதி யான்காண்

உண்டுபடு விடங்கண்டத் தொடுக்கி னான்காண்

ஒலிகடலில் அமுதமரர்க் குதவி னான்காண்

வண்டுபடு மலர்க்கொன்றை மாலை யான்காண்

வாண்மதியாய் நாண்மீனு மாயி னான்காண்

எண்டிசையும் எழிலாரும் பொழிலார் கச்சி

ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

8

2744.முந்தைகாண் மூவரினும் முதலா னான்காண்

மூவிலைவேல் மூர்த்திகாண் முருக வேட்குத்

தந்தைகாண் தண்கடமா முகத்தி னாற்குத்

தாதைகாண் தாழ்ந்தடியே வணங்கு வார்க்குச்


அழித்தும்" (தி.8 கீர்த்தி. 4,5.) என்புழிக் காண்க; உத்தமன் - மேலானவன். தானே ஆய இமையவன் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பெருந்தேவன்.

8. பொ-ரை: அடிமை செய்யும் அடியார் துயரங்களைத் தீர்ப்பவனாய், தூய மலர்போன்ற திருவடிகளை உடைய, எம் சோதி வடிவினனாய், உண்டவிடத்தைக் கழுத்தில் ஒடுக்கியவனாய், கடலிலிருந்து வெளிப்பட்ட அமுதத்தைத் தேவர்களுக்கு உதவியவனாய், வண்டுகள் பொருந்தும் கொன்றை மலர் மாலையனாய், ஒளி பொருந்திய சந்திரனும் விண்மீன்களும் ஆயினவனாய், எட்டுத் திசைகளிலும் அழகு நிறைந்த பொழில் ஆர் கச்சி ஏகம்பன் என் எண்ணத்தானே.

கு-ரை: தொண்டு படு - தொண்டு பொருந்திய. "தொண்டர்" என்றது, வாளா பெயராய் நின்றது. 'படுவிடம் உண்டு" என மாற்றுக. படு விடம் - இறத்தற்கு ஏதுவாகிய நஞ்சு. வாள் - ஒளி. எண்டிசையும் எழில் ஆரும் - எட்டுத் திசைகளும் அழுகு பொருந்துதற்கு ஏதுவாய.

9. பொ-ரை:யாவரினும் முற்பட்டவனாய், மும்மூர்த்திகளிலும் வேறுபட்டு, அவர்கள் தோற்றத்துக்குக் காரணனாய், முத்தலைச் சூலம் ஏந்தியவனாய், முருகனுக்கும் யானைமுகத்தானாகிய விநாயகனுக்கும்