பக்கம் எண் :

1001
 
மின்னிசையும் வெள்ளெயிற்றோன்வெகுண்டு வெற்பை

யெடுக்கஅடி யடர்ப்பமீண் டவன்றன் வாயில்

இன்னிசைகேட் டிலங்கொளிவா ளீந்தோன் கச்சி

ஏகம்பன் காண்அவன்என் எண்ணத் தானே.

10

திருச்சிற்றம்பலம்


சந்திரகாசம் என்ற வாளினை வழங்கிய கச்சி ஏகம்பன் என்எண்ணத்திலுள்ளான்.

கு-ரை: "பொன் இசையும், மின் இசையும்" என்பவற்றில். "இசையும் என்பன உவமஉருபுகள். "பூத கணத்தை யுடையநாதன்" என்க. 'ஆடையொடு' என உருபு விரிக்க.தன் இசைய - தனக்குப் பொருந்த; இனி, "தன்" என்றதனைச் சாரியையாக்கி, 'ஆடை தன்னொடு வைத்த' என உருபுவிரித்து உரைத்தலுமாம்."காதின்" என்பதில், சாரியை நிற்க ஐ உருபு தொக்கது. 'காதினை உடையசதுரன்' என்க; சதுரன் - திறலுடையவன். மின் இசையும் வெள் எயிற்றோன்,அரக்கன், இராவணன். 'அடியினால் அடர்ப்ப' என்க. அடர்த்தல் - வருத்துதல்.'மீண்டு' என்பது மற்றென்பதன் வினைமாற்றுப் பொருள் தந்தது."ஈந்தோன்" என்புழியும் 'காண்' என்பது விரிக்க.

திருநாவுக்கரசர் புராணம்

ஏகம்பன் காணவன்என்

எண்ணத்தான் எனப்போற்றிப்

பாகம்பெண் ணுருவானைப்

பைங்கண்விடை உயர்த்தானை

நாகம்பூண் உகந்தானை

நலம்பெருகும் திருநீற்றின்

ஆகந்தோய் அணியானை

அணிந்துபணிந் தின்புற்றார்.

- தி.12 சேக்கிழார்.