| 2747. | உரித்தானை மதவேழந் தன்னை மின்னா | | | ரொளிமுடியெம் பெருமானை உமையோர் பாகந் | | | தரித்தானைத் தரியலர்தம் புரமெய் தானைத் | | | தன்னடைந்தார் தம்வினைநோய் பாவ மெல்லாம் | | | அரித்தானை ஆலதன்கீழ் இருந்து நால்வர்க் | | | கறம்பொருள்வீ டின்பமா றங்கம் வேதந் | | | தெரித்தானைத் திருநாகேச் சரத்து ளானைச் | | | சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே. | 2 |
கு-ரை: தாயவன் - தாயாய் இருப்பவன். தலையவன் - தலைவன். மலையவன் - மலையின்கண்உள்ளவன்; சேயவன் - (அடிய ரல்லாதார்க்குச்) சேய்மையில் உள்ளவன். அணியான்(அடியார்க்கு) அண்மையில் உள்ளவன். மலை, கயிலை, அழல் - வெம்மை; நிழல் -தண்மை; 'வெம்மையாயும் தண்மையாயும் உள்ளவன்' என்றதாம். மாயவன் - வஞ்சன்.மறையவன் - வேதத்தில் உள்ளவன். மந்திரன் - மந்திர வடிவாய் உள்ளவன்.தந்திரன் - ஆகமமாய் இருப்பவன். வளராநின்ற தீ - வேள்வித் தீ; 'அத்தீயாய்இருப்பவன்' என்க. 2. பொ-ரை: மத யானைத் தோலை உரித்தவனாய், மின்னல் போல ஒளி வீசும் சடை முடிஉடையவனாய், பார்வதி பாகனாய், பகைவர் மும்மதில்களை எரித்தவனாய்,அடியார்களுடைய வினைப்பயனாம் நோய்களையும் பாவங்களையும்போக்கியவனாய், கல்லால மரத்தின் அடியில் அமர்ந்து முனிவர் நால்வர்க்குஅறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப் பொருள்களையும் அவற்றை உணரும்கருவிகளாகிய நான்கு வேதம் ஆறு அங்கங்கள் ஆகியவற்றையும்உபதேசித்தவனாய்த் திருநாகேச்சரத்தில் உறையும் பெருமானைச் சேராதார்நன்னெறிக்கண் சேராதாரே. கு-ரை: மின் ஆர் ஒளி முடி - மின்னல்போலும் ஒளியை உடைய முடி; சடைமுடி. இனி, 'மின்னார்(கங்கையாரை) ஒளித்த முடி' என்றலுமாம்; இப்பொருட்கு. இரண்டனுருபுதொகுத்தலாயிற்றாக உரைக்க. தரியலர் - பகைவர். வினைநோய் - வினையால்வரும் நோய்; பெரு நோய்கள். அரித்தான் - அறுத்தான். "அறம் பொருள்இன்பம் வீடு" என்றது.
|