| 2749. | தலையானை எவ்வுலகுந் தானா னானைத் | | | தன்னுருவம் யாவர்க்கும் அறிய வொண்ணா | | | நிலையானை நேசர்க்கு நேசன் தன்னை | | | நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற | | | மலையானை வரியரவு நாணாக் கோத்து | | | வல்லசுரர் புரமூன்றும் மடிய எய்த | | | சிலையானைத் திருநாகேச் சரத்து ளானைச் | | | சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே. | 4 |
4. பொ-ரை: தலைவனாய், எல்லா உலகும் தானே ஆனவனாய், தன் உருவத்தைப் பிறர் அறியமுடியாத நிலையினனாய், அடியார்க்கு அன்பனாய், நீண்ட வானத்து உச்சியைத் தடுத்துஓங்கிய மலைகளானவனாய், கோடுகளை உடைய பாம்பினை நாணாகக் கட்டி, கொடிய அசுரருடைய மும்மதில்களையும் அழியுமாறு அம்பு எய்த வில்லை ஏந்தியவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக்கண் சேராதாரே. கு-ரை: தலையான் - தலைவன்; முதல்வன்; பதி. இறைவனை யாவரும் உருவறியார் என்பதனை, "அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது" (தி.11 அற்புதத்திருவந்தாதி - 61.) என்று அருளிய அம்மை திருமொழியாலுங் காண்க. உருவம் என்றது, திருமேனியையே யன்றி அவனது உண்மை இயல்பையும் குறிப்பதேயாம். வீடு பெற்றார்க்கும் அவனது இன்பத்தை நுகர்ந்து வாழ்தலன்றி, அவனது இயல்பினை முற்றும் அளவிட்டுணர்தல் இயலாது என்பதை, "கடல்அலைத்தே ஆடுதற்குக் கைவந்து நின்றும் கடல்அளக்க வாராதாற் போலப் - படியில் அருத்திசெய்த அன்பரைவந் தாண்டதுவும் எல்லாம் கருத்துக்குச் சேயனாய்க் காண்" (திருக்களிற்றுப்படியார் - 90.)
|