| 2751. | துறந்தானை அறம்புரியாத் துரிசர் தம்மைத் | | | தோத்திரங்கள் பலசொல்லி வானோ ரேத்த | | | நிறைந்தானை நீர்நிலந்தீ வெளிகாற் றாகி | | | நிற்பனவும் நடப்பனவு மாயி னானை | | | மறந்தானைத் தன்னினையா வஞ்சர் தம்மை | | | அஞ்செழுத்தும் வாய்நவில வல்லோர்க் கென்றுஞ் | | | சிறந்தானைத் திருநாகேச் சரத்து ளானைச் | | | சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே. | 6 |
| 2752. | மறையானை மால்விடையொன் றூர்தி யானை | | | மால்கடல்நஞ் சுண்டானை வானோர் தங்கள் | | | இறையானை யென்பிறவித் துயர்தீர்ப் பானை | | | இன்னமுதை மன்னியசீர் ஏகம் பத்தில் | | | உறைவானை ஒருவருமீங் கறியா வண்ணம் | | | என்னுள்ளத் துள்ளே யொளித்து வைத்த | | | சிறையானைத் திருநாகேச் சரத்து ளானைச் | | | சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே. | 7 |
6. பொ-ரை: அறத்தை விரும்பாத குற்றமுடையவர்களைக் கைவிட்டவனாய், தேவர்கள் பலவாகத் துதித்துப்புகழுமாறு, எல்லா முதன்மைகளாலும் நிறைந்தவனாய், ஐம்பூதமும்,அவற்றின் காரியமாகிய சராசரமும் ஆகியவனாய், தன்னைத் தியானிக்காத வஞ்சர்களை மறந்து திருவைந்தெழுத்தை ஓதுபவர்களுக்கு எக் காலத்திலும் சிறந்து உதவுபவனாய், திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே. கு-ரை: துரிசர் - குற்றம் உடையவர். 'துரிசர்தம்மைத் துறந்தானை' எனவும்,'வஞ்சகர்தம்மை மறந்தானை' எனவும் இயைக்க. ஏத்த - புகழும்படி. நிறைந்தான் -எல்லா முதன்மைகளாலும் நிரம்பினான். "வல்லோர்" என்றது. "நான்மறக்கினும் - சொல்லும்நா நமச்சிவாயவே' (தி.7. ப.48.) என்றருளியவாறு சொல்லவல்லவர் என்றபடி. 7. பொ-ரை:வேதப் பொருளாய் உள்ளவனாய், பெரிய காளை வாகனனாய், பெரிய கடலில் தோன்றிய விடத்தை உண்டவனாய், தேவர்கள் தலைவனாய், என் பிறவித்துயரைப் போக்குபவனாய்,
|