பக்கம் எண் :

1008
 
2753.எய்தானைப் புரமூன்றும் இமைக்கும் போதில்

இருவிசும்பில் வரும்புனலைத் திருவார் சென்னிப்

பெய்தானைப் பிறப்பிலியை அறத்தில் நில்லாப்

பிரமன்தன் சிரமொன்றைக் கரமொன் றினால்


நிலைபெற்ற சிறப்பினை உடைய ஏகம்பத்தில் இனிய அமுதமாக உறைபவனாய், மற்றவருக்குப் புலப்படாத வகையில் அடியேன் உள்ளத்தினுள்ளே சிறை செய்துவைக் கப்பட்டவனாய், திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.

கு-ரை: மறையான் - வேதத்தின்கண் உள்ளவன்: வேதப் பொருளாய் உள்ளவன். மால்கடல்- பெரிய கடல். இறையான் - கடவுள்; 'தேவர்க்குத் தேவன்' என்றவாறு, 'யான்ஒளித்து வைத்த' என்க. சிறையான் - சிறையில் உள்ளவன். இறைவனைத் தாம் அனுபவமாக இடையறாது உணர்ந்து இன்புற்றிருக்கவும், பிறர் ஒருஞான்றும் அதுமாட்டாது, துன்பிற்கிடந்து சுழல்கின்றார் என்பதனை, பான்மை வகையால் இவ்வாறு அருளிச் செய்தார்.

"நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை அம்பலத்
தாடி பாதம்என் நெஞ்சு ளிருக்கவே"

(தி.5. ப.1. பா.10)

எனத் திருக்குறுந்தொகையினும் அருளிச்செய்தார்.

"ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும்
போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல
தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து
மாயத்தால் வைத்தோம் மறைத்து"

(தி.11 அற்புதத் திருவந்தாதி-96)

என அம்மையும் இவ்வாறே அருளுதல் காண்க.

8. பொ-ரை: இமைகொட்டும் நேரத்தில் மும்மதில்களையும் அம்பு எய்து அழித்தவனாய், வானிலிருந்து இறங்கிய கங்கை வெள்ளத்தை அழகிய தலையில் ஏற்றவனாய், பிறப்பில்லாதவனாய், அறவழியில் நில்லாத பிரமனுடைய தலை ஒன்றனைத் தன்கை ஒன்றினால் நீக்கியவனாய், கூத்து நிகழ்த்துதலில் வல்லவனாய், குறிக்கோள் ஏதும் இல்லாத கொடியவனான என்னை அடியவனாகச் செய்தானாய் உள்ள திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.