பக்கம் எண் :

1009
 
கொய்தானைக் கூத்தாட வல்லான் தன்னைக்

குறியிலாக் கொடியேனை அடியே னாகச்

செய்தானைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

8

2754.அளியானை அண்ணிக்கும் ஆன்பால் தன்னை

வான்பயிரை அப்பயிரின் வாட்டந் தீர்க்குந்

துளியானை அயன்மாலுந் தேடிக் காணாச்

சுடரானைத் துரிசறத் தொண்டு பட்டார்க்

கெளியானை யாவர்க்கும் அரியான் தன்னை

இன்கரும்பின் தன்னுள்ளா லிருந்த தேறல்

தெளியானைத் திருநாகேச் சரத்து ளானைச்

சேராதார் நன்னெறிக்கண் சேரா தாரே.

9


கு-ரை: "இமைக்கும் போதில்" என்றது, எய்தமை. பெய்தமை இரண்டிற்குமாம். திரு -அழகு. "அறம்" என்றது, வேதத்தின் பொருளை; அஃதாவது, 'சிவபிரானேமுதற்பொருள்' என்பது, வேதத்தினை ஒழியாது ஓதியும், உணர்ந்தும், பிறர்க்கு உரைத்தும் தான் அடங்காப் பெரும் பேதையாயினானாகலின், அவனை உணர்த்தும் வாயிலின்றித் தலைகளில் ஒன்றைக் கொய்தான்' என்றபடி. குறி -குறிக்கோள்; "குறிக்கோள் இலாது கெட்டேன்" (தி.4. ப.67. பா.9.) என்றருளினமை காண்க.

9. பொ-ரை: கருணை உடையவனாய், இனிக்கும் பசுப்பால் போல்பவனாய், உலகில் வளரும்பயிர்களாய், அப்பயிர்களின் வாட்டம் தீர்க்கும் மழையாய் உள்ளவனாய், பிரமனும், திருமாலும் தேடியும் காண முடியாத தீப்பிழம்பாய், குற்றம்தீரத்தொண்டு செய்யும் அடியவருக்கு எளியவனாய், மற்றயாவருக்கும்அரியவனாய், இனிய கருப்பஞ்சாற்றின் தெளிவு போன்றவனாய்த் திருநாகேச்சரத்து உறையும் பெருமானைச் சேராதார் நன்னெறிக் கண் சேராதாரே.

கு-ரை: அளியான் - கருணையுடையவன். அண்ணிக்கும் - தித்திக்கின்ற. ஆன்பால் -பசுவின்பால். 'மாண்பன் தன்னை' எனவும்,