பக்கம் எண் :

1012
 
2757.சொற்பாவும் பொருள்தெரிந்து தூய்மை நோக்கித்

தூங்காதார் மனத்திருளை வாங்கா தானை

நற்பான்மை அறியாத நாயி னேனை

நன்னெறிக்கே செலும்வண்ணம் நல்கி னானைப்


கு-ரை: யாவரும் இறைவனுக்கு அடியவரேயாகலின், அவனை அறிந்து அடைந்தோரை, "ஆளானஅடியவர்கள்" என்று அருளினார். அவர்கட்கு அன்பன் ஆதலாவது, அவர்க்கு வேண்டுவனயாவும் தானே முன்வந்து அருளுதல்; இதனை, திருஞானசம்பந்தர்க்கு முத்துச்சிவிகை, முத்துப்பந்தர் முதலியவைகளும், நாயனார்க்குப்பொதிசோறும், அவர் இருவர்க்கும் திருவீழிமிழலையில் படிக்காசுகளும், வன்றொண்டர்க்கு ஊரில் இரந்து கொணர்ந்த சோறும் தானே முன்வந்து அளித்தமையாலும், பிறவாற்றாலும் இனிது தெளியப்படும். "புக்க" என்னும் பெயரெச்சம், "தாள்" என்றதனோடு முடிந்தது. இத் தொடரினை, "ஆளானவர்கட் கன்பா போற்றி" என்னும் திருவாசகத் தொடருடன் வைத்துநோக்குக. (தி.8 போற்றித் - 198) தாள் - திருவடி; திருவடியே அடியவரைத் தாங்குவன என்பது, "உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாள்" (தி.11 திருமுருகு - 4)என்றதனானும் விளங்கும். "சாந்து" என்றது, கத்தூரி முதலியவற்றை. சந்தனம் முதலியன, அடியவர் செய்யும் வழிபாட்டிற் பெறுவன. தோளாத - துளைஇடாத. துளையிடப்பட்ட முத்துச் செயற்கையாய் சிதைவுபட்டுப் பெருமை குறைதலின், இறைவனை இயற்கையாய் நின்று பெரிதும் போற்றப் படும் துளையிடாத முத்தாக அருளுவர் ஆசிரியர்; இதனை, "தோளா முத்தச் சுடரே போற்றி"(தி.11 திருவா. போற்றித் - 197) என்றதனாலும் உணர்க. 'தூயதாக வெளுத்த' என ஆக்கம் வருவித்து உரைக்க. "கோவணத்தை" என்னும் இரண்டாவது, "கீளானை" என்னும் வினைக்குறிப்போடும், "ஆர்த்த" என்பது, "கீளான்" என்பதன் முதனிலையோடும் முடியும்; எனவே, 'கோவணத்தை -அரையில் ஆர்த்த கீளின்கண் உடையான்' என்பது பொருளாம். கீள் - கோவணத்தை இணைத்துவைத்திருக்குமது. கேடு - அழிவு; பிறந்து இறத்தல். நாடுதல் -விரும்புதல்; விரும்பி அடைதல்.

2. பொ-ரை: சிவபெருமானுடைய இயல்புகளை உணர்த்தும் பாடல்களில் உள்ள சொற்களின்பொருளை நன்றாக உணர்ந்து, மலங்கள் பற்றற நீங்கப் பெற்றுப் பசுபோதம் நீங்கி, அருளில் அடங்கி நில்லாதவர்கள் உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தை நீக்காதவனாய், உய்வதற்குரிய வழியை அறியாத நாய் போன்ற கீழ்மையனாகிய என்னை நல்ல வழியில் செல்லும்