| பற்பாவும் வாயாரப் பாடி யாடிப் | | | பணிந்தெழுந்து குறைந்தடைந்தார் பாவம் போக்க | | | கிற்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் | | | கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 2 |
வண்ணம் விரும்பி ஆட்கொண்டவனாய், பற்கள் வரிசையாக அமைந்தவாயினால், உச்சரிப்பில் குறை ஏற்படாதவகையில் பாடியும் ஆடியும் பணிந்து எழுந்தும், குறை இரந்து தன்னைச் சரணமாக அடைந்தவர்களுடைய பாவங்களைப் போக்கும் ஆற்றலுடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடுஇலார். கு-ரை: சொற்பாவும் பொருள் - சொல்லின்கண் பரவிய (நிறைந்துள்ள) பொருள். தூய்மைநோக்கி - தூய்மை பெறுதல் (மலங்களெல்லாம் பற்றற நீங்குதல்) குறித்து. தூங்குதல் - பசுபோதம் நீங்கி அருளில் அடங்கிநிற்றல். "சொல்" என்றது, சிவபிரானது இயல்பு உணர்த்தும் பாட்டுக்களை. அவற்றின் பொருளைத் தெரிந்தாலன்றித் தூய்மை நோக்குதலும், தூங்குதலும் இயலாவாகலான், 'சொற்பாவும் பெருள் தெரிந்து' என்றருளினார்; இவ்வாறே, "திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின்" என ஆளுடைய அடிகளும் (தி.8. சிவபுராணம். 92 - 94) அருளியது காண்க. "மனம்" என்றது, உயிரினது அறிவை; அதன் இருளாவது, அறியாமை; ஆணவ மலம். பான்மை - பகுதி; நெறி. நாயினேனை - நாய்போன்றவனாகிய என்னை; இழிவுடைமைக்கு நாயினை உவமையாகக் கூறுதல், தொன்றுதொட்டதொரு வழக்கு. "நற்பான்மை" என முன்னர் அருளினமையின், "நன்னெறிக்கே" என்றது, 'அதற்கே' என்னும் சுட்டளவாய் நின்றது. 'பற்பாவும் பாடி' என இயையும்; 'பல் பா' என்பது, எதுகைநோக்கித் திரிந்தது. பா - திருப்பாடல். இனி, 'பற்பாவும் (பற்கள்நிறைந்த) வாய்' என்றே இயைத்து, 'எழுத்துக்கள் இனிது பிறத்தற்கு ஏதுவாய பற்களும் அவற்றையுடைய வாயும் பயன் பெறுமாறு பாடி' என உரைத்தலுமாம்;இப்பொருட்கு "பாடி" என்றதற்குச் செயப்படுபொருளாகிய 'பாடல்கள்' என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்படும். குறைந்து - குறை இரந்து. போக்ககிற்பான் - நீக்க வல்லவன்.
|