பக்கம் எண் :

1014
 
2758.அளைவாயில் அரவசைத்த அழகன் தன்னை

ஆதரிக்கும் அடியவர்கட் கன்பே யென்றும்

விளைவானை மெய்ஞ்ஞானப் பொருளா னானை

வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்

குளைவானை அல்லாதார்க் குளையா தானை

உலப்பிலியை உள்புக்கென் மனத்து மாசு

கிளைவானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்

கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

3

2759.தாட்பாவு கமலமலர்த் தயங்கு வானைத்

தலையறுத்து மாவிரதந் தரித்தான் தன்னைக்

கோட்பாவு நாளெல்லா மானான் தன்னைக்

கொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்


3. பொ-ரை: புற்றில் உள்ள பாம்புகளை அணிந்த அழகனாய், தன்னை விரும்பும் அடியவர்களுக்கு அன்பனாய், மெய்ஞ்ஞானப் பொருளாய், பெருந்திறல் உடையவனாய், பத்தர்களுடைய பத்தி எவ்வளவிற்றாயினும் அதற்கு மனம் இரங்குபவனாய், பத்தர் அல்லாதவருக்கு இரங்கானாய், என்றும் அழிவில்லாதவனாய், என் உள்ளத்துப்புக்கு அங்குள்ள மாசுகளைக் கல்லி எடுத்து நீக்குபவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள அழிவற்ற பெருமானை அடைக்கலம் அடைந்தவர்கள் கேடிலாரே.

கு-ரை: அளை வாயில் - புற்றாகிய இடத்தில் உள்ள. ஆதரிக்கும் - விரும்புகின்ற. "அன்பு விளைவான்" என, பண்பின் தொழில் பண்பிமேல் ஏற்றப் பட்டது. வித்தகன் - திறல் உடையவன். உளைதல் - வருந்துதல்; ஈண்டு, மனம் இரங்குதல். உலப்பு - அழிவு. "மனத்து" எனப் பின்னர் வருகின்றமையின் வாளா 'உள்புக்கு' என்றருளினார். 'கிளைப்பான்' என்பது, எதுகை நோக்கி, 'கிளைவான்' என நின்றது; கிளைத்தல் - கல்லுதல். "மனத்து மாசு" என்பதன்றி, 'மனப்பசாசு' எனப் பாடம் ஓதுவாரும் உளர்.

4. பொ-ரை: தண்டிலே விரிந்த தாமரையில் உறையும் பிரமனுடைய தலை ஒன்றினை அறுத்தவனாய், மாவிரத சமயத்திற்கு உரிய வேடத்தை அணிந்தவனாய், கிரகங்களின் பெயரால் அமைந்த கிழமைகள் யாவும் ஆவானாய், தீவினையை உடைய அடியேன் நின்ற கொடிய நரகக்