| மீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை | | | வேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை | | | கேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் | | | கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 4 |
| 2760. | நல்லானை நரைவிடையொன் றூர்தி யானை | | | நால்வேதத் தாறங்கம் நணுக மாட்டாச் | | | சொல்லானைச் சுடர்மூன்று மானான் தன்னைத் | | | தொண்டாகிப் பணிவார்கட் கணியான் தன்னை | | | வில்லானை மெல்லியலோர் பங்கன் தன்னை | | | மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க | | | கில்லானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் | | | கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 5 |
குழியிலிருந்து அடியேனை மீட்பவனாய், பவளக் கொத்தினை ஒத்தநிறத்தினனாய், வேதம் ஓதுபவனாய், வேதத்தின் பொருள் கொண்ட வீணை ஒலியைக் கேட்பானாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்த வர்கள் கேடிலாரே. கு-ரை: தாள் பாவு - தண்டின்கண் விரிந்த. தயங்குவான் - விளங்குவான்; கமல மலரில் தயங்குபவன், பிரமன்; 'தங்குவானை' எனப் பாடம் ஓதுதல் சிறக்கும்."மாவிரதம்" என்றது, மாவிரத சமயத்தவர்க்கு உரிய வேடங்கள்; அவை, எலும்பு மாலை முதலியன. கோள் பாவும் நாள் - கோள்களின் உரிமை பொருந்தியநாள்; கிழமைகள். 'நின்றால்' என்றதனால், நில்லாமை பெறப்பட்டது. அவ்வாறன்றி, 'யாதானுமோராற்றால் நின்றாலும் மீட்பான்' என்றதாம். வித்து உரு - வித்தாகிய உருக்கள்; 'அவற்றின் கொத்து ஒப்பான்' என்றது, 'எல்லாப் பொருள்களின் முதலும் தானேயானவன்' என்றவாறு; இனி, 'வித்துருமத்தின் கொத்து' என்பது குறைந்து நின்றது எனினுமாம். வித்துருமம் -பவளம். "வீணை" என்றது, கருவியாகு பெயராய், அதன் இசையைக் குறித்தது. 5. பொ-ரை: பெரியவனாய், வெண்ணிறக் காளை வாகனனாய், நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் அணுகமாட்டாத அருள் ஞானத்தானாய், மூன்று சுடர்களும் ஆனவனாய், தொண்டர்களாகித் தன்னைப்
|