பக்கம் எண் :

1016
 
2761.சுழித்தானைக் கங்கைமலர் வன்னி கொன்றை

தூமத்தம் வாளரவஞ் சூடி னானை

அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ

ஆலால நஞ்சதனை உண்டான் தன்னை

விழித்தானைக் காமனுடல் பொடியாய் வீழ

மெல்லியலோர் பங்கனைமுன் வேன லானை

கிழித்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்

கேடிலியை நாடுமவர் கேடி லாரே. 

6


பணிபவர்களுக்கு அருகில் உள்ளவனாய், சுயம்பிரகாசனாய், பார்வதிபாகனாய், உண்மையாகத் தன்னை தியானிக்காதவர்கள் வினைகளைப்போக்காதவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாகஅடைந்தவர்கள் கேடிலாரே.

கு-ரை: நரை விடை - வெள்விடை; 'முதிய விடை' என்பது நயம். நால்வேதமும் ஆறங்கமும்நணுக மாட்டாத சொல், அருள் ஞானம்; 'அதனானே உணரப்படும் பொருளாய் உள்ளவன்'என்பது கருத்து. 'பணிவார்கட் கினியான் தன்னை' என்பதும் பாடம்."வில்லான்" என்றது, இசையெச்சத்தால், 'மேரு வில்லானை' எனப்பொருள்தரும். மெய் - துணிபு; 'அஃது உடையாராய் நினையாதார்' என்றது ஐயத்தொடுநினைவாரை. தீர்க்ககில்லான் - தீர்க்கமாட்டாதவன்; 'தீர்த்தல்செய்யாதவன்' என்றபடி.

6. பொ-ரை: கங்கையைச் சடையில் வளைத்துக் கொண்டவனாய், அச்சடையில் வன்னி,கொன்றை, ஊமத்தை மலர்கள், ஒளி பொருந்திய பாம்பு இவற்றைச் சூடியவனாய்,மும்மதில்களும் தீயில் வெந்து சாம்பலாகுமாறு அழித்தவனாய், ஆலகாலவிடத்தை உண்டவனாய், மன்மதன் உடல் பொடியாக விழுமாறு தீக்கண்ணால்விழித்தானாய், பார்வதி பாகனாய், முன்னொரு காலத்தில் வேல் போன்றகூரிய தந்தங்களை உடைய யானைத் தோலைக் கிழித்து உரித்தவனாய்க்கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள்கேடிலாரே.

கு-ரை: 'கங்கை சுழித்தானை' என்க. சுழித்தல் - வளைத்தல்; அடக்குதல். இவ்வாறன்றி'சுழிகளாகிய தானைகளை (படைகளை) யுடைய கங்கை' என்றலுமாம். 'மலராகிய வன்னிகொன்றை மத்தம்' என்க. வன்னி, இலையாயினும், மலர்களோடு ஒப்பக்கொள்ளப்படுதல் பற்றி மலர்களுள்