| 2762. | உளரொளியை உள்ளத்தி னுள்ளே நின்ற | | | ஓங்காரத்துட் பொருள்தான் ஆயி னானை | | | விளரொளியை விடுசுடர்கள் இரண்டும் ஒன்றும் | | | விண்ணொடுமண் ஆகாச மாயி னானை | | | வளரொளியை மரகதத்தி னுருவி னானை | | | வானவர்க ளெப்பொழுதும் வாழ்த்தி யேத்துங் | | | கிளரொளியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் | | | கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 7 |
வைத்து எண்ணினார். 'வேவ அழித்தானை, வீழ விழித்தானை' என்க. 'ஆலாலம்' என்பது பாற்கடலில் தோன்றிய விடத்தின் பெயர். வேல் நல் ஆனைகிழித்தான் - வேல்போலும் நகத்தால் வன்மை மிக்க யானையைப் பிளந்தான். கயாசுரனாகிய யானையைச் சிவபிரான் தனது நகத்தால் பிளந்தமையை, "ஒருப தத்தினைக் கவானுறுத் திருகரத் துகிரால் வெரிநி டைப்பிளந் தீரிரு தாள்புடை மேவ குருதி கக்கியே வோலிட வவுணர்தங் குலத்துக் கரியு ரித்தனன் கண்டுநின் றம்மையுங் கலங்க" என்பதால் (கந்தபுராணம். ததீசியுத்தரப்படலம் - 146) அறிக. இனி, "வேல்" என்றது வேலேந்திய படை ஆட்களைக் குறித்தது எனக் கொண்டு, 'வேலாண் முகத்த களிறு" (குறள் - 500) என்றாற்போல. 'அவர்களைக்கோட்டில் ஏந்திய யானை' என, அதனது வலிமை தோன்ற அருளியதாக உரைத்தலுமாம். இன்னும் "வேல்" என்றதற்கு, 'வேல் போலும் தந்தத்தினை யுடைய' எனினும் பொருந்தும். "நன்மை" ஈண்டு, வலிமை மிகுதி குறித்தது. 'வேனலானை' எனவும், 'வேனிலானை' எனவும் இரண்டனுருபு விரிந்து நின்றதாகவே ஓதுவன பாடம் ஆகாமைக்கு, "கிழித்தான்" என்பதுதானே சான்றாகும். மேல், "விழித்தானைக்காமனுடல் பொடியாய் வீழ" என அருளிச் செய்தவர். மறித்தும் ஈண்டே அதனை அருளிச்செய்தார் என்றல் பொருந்துமாறு எங்ஙனம் என்க. 7. பொ-ரை: அசைகின்ற ஒளிவிளக்காய், உள்ளத்து நிலை பெற்ற ஓங்காரத்தின் உட்பொருளாய், வெள்ளொளி உடைய சூரியன், சந்திரன், செந்நிறமுடைய அக்கினி என்ற இவையாகி, தேவருலகும், நிலவுலகும், தேவருலகுக்கும் மேற்பட்ட ஆகாயமுமாகி, மாணிக்கத்தின் ஒளியும்
|