| 2763. | தடுத்தானைக் காலனைக் காலாற் பொன்றத் | | | தன்னடைந்த மாணிக்கன் றருள்செய் தானை | | | உடுத்தானைப் புலியதளோ டக்கும் பாம்பும் | | | உள்குவா ருள்ளத்தி னுள்ளான் தன்னை | | | மடுத்தானை அருநஞ்சம் மிடற்றுள் தங்க | | | வானவர்கள் கூடியஅத் தக்கன் வேள்வி | | | கெடுத்தானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் | | | கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 8 |
மரகதத்தின் ஒளியுமாகி, தேவர் எப்பொழுதும் வாழ்த்தித் துதிக்கும் ஒளிமிக்க திருமேனியை உடையவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே. கு-ரை: உளர் ஒளி - அசைகின்ற ஒளி; விளக்கு. காற்றுக் காரணமாக எஞ்ஞான்றும் அசைந்து விளங்குதலே அதற்கியல்பாதல் பற்றி, அவ்வாறருளினார். ஓங்காரத்து உட்பொருள், மேலே காட்டப்பட்டது. (ப.39 பா.10) விளர் ஒளி - வெளுத்த ஒளி; 'அதனை விடுகின்ற சுடர்கள் இரண்டும் ஒன்றும்' என்க. இரண்டு, சூரியனும் சந்திரனும்; ஒன்று, நெருப்பு. இவை மூன்றனது ஒளியும் வெள்ளியவாதல் அறிந்து கொள்க. முச்சுடர்களில், ஞாயிறும் திங்களும் ஒருதிறத்தினவாகவும், நெருப்பு மற்றொரு திறத்தினதாகவும் காணப்படுதல் பற்றி இவ்வாறு, "இரண்டும் ஒன்றும்" எனப் பிரித்தோதி யருளினார்; "வளர் ஒளி" என்றது, மாணிக்கத்தினது ஒளியை; அது, கழுவுந்தொறும் வெளிப்படுதல் பற்றி அவ்வாறு அருளிச்செய்தார். கிளர் ஒளி - மிக்க ஒளி; என்றது அவனது அருட்டிருமேனிகளை; அவை, அவற்றின் மிக்க ஒளியில்லாத பேரொளியினவாதல் பற்றி, அவ்வாறருளிச்செய்தார். உளரொளியாயும், வளரொளியாயும் இருப்பவனை அவைகளாகவே அருளியது, ஒற்றுமைபற்றி அருளிய பன்மைவழக்கு. 'கிளரொளி' என்றது முன்னர்ப் பண்பாகுபெயராய்த் திருமேனியையும், பின்னர்ச்சினையாகுபெயராய் அதனை உடையவனையுங் குறித்த இருமடி ஆகுபெயர்; 'உடம்பும் உறுப்பெனப்படும்' என்பது, "உறுப்பொத்தல் மக்களொப் பன்றால்" (குறள்- 993) என்பதனால் அறிக. 8. பொ-ரை: கூற்றுவன் இறக்குமாறு அவனைக் காலால் உதைத்து, தன்னைச் சரணடைந்தமார்க்கண்டேயனுக்கு ஒருகாலத்தில் அருள் செய்தவனாய், புலித்தோலோடு எலும்பும் பாம்பும் பூண்டவனாய், தன்னை
|