பக்கம் எண் :

1019
 
2764.மாண்டா ரெலும்பணிந்த வாழ்க்கை யானை

மயானத்திற் கூத்தனைவா ளரவோ டென்பு

பூண்டானைப் புறங்காட்டி லாட லானைப்

போகாதென் னுள்புகுந் திடங்கொண் டென்னை

ஆண்டானை அறிவரிய சிந்தை யானை

அசங்கையனை அமரர்கள்தஞ் சங்கை யெல்லாங்

கீண்டானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்

கேடிலியை நாடுமவர் கேடி லாரே.

9


அன்போடு வழிபடுபவர் உள்ளத்து இருப்பவனாய், கொடிய நஞ்சினைத் தன்கழுத்தில் தங்குமாறு உண்டவனாய், தேவர்கள் கூடியிருந்த தக்கனுடைய வேள்வியை அழித்தவனாய், உள்ள கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே.

கு-ரை: 'காலால் தடுத்தான்' என்பது, 'உதைத்தான்' என்னும் பொருளது. 'காலனைப்பொன்றக் காலால் தடுத்தானை' எனக் கூட்டுக. 'தடுத்து அருள்செய்தான்' என எடுத்து இயைவிக்க. மாணி - பிரமசாரி; மார்க்கண்டேயர். அதள் - தோல். "அதளோடு" என்றதில் ஓடுவுருபு, 'தொடியொடு தொல்கவின் வாடிய தோள்' (குறள்- 1235) என்பதிற் போல, வேறுவினைக்கண் வந்தது. அக்கு - எலும்பு. மடுத்தான் -வாய் மடுத்தான்; உண்டான். 'மிடற்றுள் தங்க மடுத்தான்' என்க.

9. பொ-ரை: இறந்தவர்களுடைய எலும்புகளை அணியும் இயல்பினனாய், கடவூர் மயானம் முதலிய இடங்களில் கூத்தாடுபவனாய், ஒளி பொருந்திய பாம்போடு எலும்பை அணிபவனாய், சுடுகாட்டில் ஆடுபவனாய், என் உள்ளத்தில் இடம் பெற்று, அதனை விடுத்துநீங்காது, என்னை அடிமை கொண்டானாய், தன் உள்ளத் திருப்பதனைப் பிறர்அறிய இயலாதவனாய், அச்சம் இல்லாதவனாய்த் தேவர்களின் அச்சத்தைப் போக்கியவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே.

கு-ரை: எலும்பு அணிந்த வாழ்க்கை - எலும்பை அணிதற்கு ஏதுவாய் நின்ற வாழ்க்கை; என்றது, 'வறுமை வாழ்க்கை' என்னும் பொருட்டாய், அவனது நிலைபேற்றினைக் குறிக்கும் குறிப்பு மொழியாய் நின்று, பழித்ததுபோலப் புகழ்புலப்படுத்துநின்றது; "மாண்டார் எலும்பு" என்றதும்