| 2765. | முறிப்பான பேசிமலை யெடுத்தான் தானும் | | | முதுகிறமுன் கைந்நரம்பை யெடுத்துப் பாடப் | | | பறிப்பான்கைச் சிற்றரிவாள் நீட்டி னானைப் | | | பாவியேன் நெஞ்சகத்தே பாதப் போது | | | பொறித்தானைப் புரமூன்றும் எரிசெய் தானைப் | | | பொய்யர்களைப் பொய்செய்து போது போக்கிக் | | | கிறிப்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக் | | | கேடிலியை நாடுமவர் கேடி லாரே. | 10 |
திருச்சிற்றம்பலம்
அதுபற்றி, பின்னர் "அரனொடு என்பு பூண்டான்" என்றது, அவனது பற்றின்மையைக் குறிக்கும். "மயானம், புறங்காடு" என்னும் இரண்டனுள்முன்னது, 'உலக முழுதும் ஒடுங்கிய நிலையையும், பின்னது உலகப் புறங்காட்டையும் குறித்து, முன்னின்ற தொடர்களின் பொருளை வலியுறுத்தின. உள் - உள்ளம். 'அதனை இடங்கொண்டு' என்க. சிந்தை, அவனது திருவுள்ளக் குறிப்பு; அதனை அறிவார் ஒருவரும் இல்லை என்க. அசங்கை - அச்சம் இன்மை; 'அச்சம் இல்லாதவன்' என்றது, 'தான் யார்க்கும் குடியல்லாத் தன்மையன்; தன்வயம் உடையவன்' என்றபடி. சங்கை - அச்சம்; அமரர்கள்தம் அச்சம் எல்லாம் தீர்த்தது, அசுரர்களை அழித்து என்க. கீண்டான் - பிளந்தான்; அழித்தான். 10. பொ-ரை: தனக்கு அறிவுரை கூறிய தேர்ப்பாகனிடம் கடுஞ் சொற்கள் பேசிக் கயிலைமலையை அசைத்த இராவணன் முதுகு நொறுங்குமாறு அழுத்திப்பின் அவன் தன்கை நரம்புகளை வீணைத் தந்திகளாகக் கொண்டு பாட மலையை அசைத்த அவனுக்குச் சிறிய வாளை அருள் செய்தவனாய், அடியேன் உள்ளத்தே தன் திருவடிகளைப் பதித்தவனாய், மும்மதில்களையும் எரித்துச் சாம்பல் ஆக்கியவனாய், அன்பின்றி வழிபடுபவர்களுக்குத் தானும் அருள்புரிவான் போன்று காட்டிவஞ்சிப்பவனாய்க் கீழ்வேளூரை ஆளும் அரசனாய் உள்ள பெருமானை அடைக்கலமாக அடைந்தவர்கள் கேடிலாரே. கு-ரை: முறிப்பு ஆன - தொடர்பை அறுப்பனவாகிய சொற்கள்; 'கடுஞ்சொற்கள்' என்றபடி. தான், அசைநிலை; உம்மை, சிறப்பு. முதுகு இற - முதுகு நெரியப்பெற்றமையால். எடுத்து - உரத்து. பறிப்பான் - அவன், பகைவரது உயிரை வாங்குதற் பொருட்டு. அரிவாள் - பகைவரது
|