உறுப்புக்களை அறுக்கின்ற வாள்; 'சிற்றரிவாள்' என்றது, 'அஃது ஒன்றுதானே பலபெருவீரரை வெல்லும் ஆற்றலுடைத்து' என்பது தோற்றுவித்தற்பொருட்டு. "நீட்டினான்" என்றது, பான்மைவழக்கால், "ஈந்தான்" என்னும் பொருளைத் தந்தது. பொய்யர்கள், அன்பின்றி வழிபடுவோர்; பொய்செய்து -அருள் புரிவான் போன்று அதனைக் கடைபோகச் செய்யாது. கிறிப்பான் - வஞ்சிப்பான்; கிறி - வஞ்சனையாதல், "கேட்டாயோ தோழி கிறி செய்தவாறொருவன்" (தி.8 திருவா. திருவம். 6) என்பதனான் அறிக. திருநாவுக்கரசர்புராணம் | நான்மறைநூற் பெருவாய்மை நமிநந்தி யடிகள் திருத் | தொண்டின் நன்மைப் | | பான்மைநிலை யாலவரைப் பரமர்திரு விருத்தத்துள் | வைத்துப் பாடித் | | தேன்மருவுங் கொன்றையார் திருவாரூ ரரனெறியிற் | றிகழுந் தன்மை | | யானதிற மும்போற்றி யணிவீதிப் பணிசெய்தங் | கமரு நாளில். |
| நீராருஞ் சடைமுடியார் நிலவுதிரு வலிவலமும் | நினைந்து சென்று | | வாராரு முலைமங்கை யுமைபங்கர் கழல்பணிந்து | மகிழ்ந்து பாடிக் | | காராருங் கறைக்கண்டர் கீழ்வேளூர் கன்றாப்பூர் | கலந்து பாடி | | ஆராத காதலினால் திருவாரூர் தனின்மீண்டும் | அணைந்தார் அன்றே. | -தி.12 சேக்கிழார். |
|