| 2767. | காரொளிய கண்டத்தெங் கடவுள் தன்னைக் | | | காபாலி கட்டங்க மேந்தி னானைப் | | | பாரொளியை விண்ணொளியைப் பாதாளனைப் | | | பால்மதியஞ் சூடியோர் பண்பன் தன்னைப் | | | பேரொளியைப் பெண்பாகம் வைத்தான் தன்னைப் | | | பேணுவார் தம்வினையைப் பேணி வாங்குஞ் | | | சீரொளியைத் திருமுதுகுன்றுடையான் தன்னைத் | | | தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 2 |
"கனகத் தின்" என்பதில் 'இன்' அல்வழிக்கண் வந்த சாரியை. "கருதுவார்க்கு ஆற்ற எளியான்" என்பது மேலே (ப.23. பா.1) வந்தது. குருமணி -நிறம் வாய்ந்த மணி. "கோவணவன் தன்னை" என்பது பாடம் அன்று. அருமணி -கிடைத்தற்கு அரிய மணி. திருமணி - அழகிய மணி. "கரு மணி" முதலியன உவமையாகு பெயர்கள். 'அறியாதிருந்தமைக்குக் காரணம் தீவினை' என்பது உடம்பொடு புணர்த்தலாற் கொள்க. அறிதலினின்றும் பிரித்தலின், "அறியாதே" என்னும் ஏகாரம் பிரிநிலை. திகைத்தல் - மயங்குதல். 'திகைத்தவாறு இரங்கத் தக்கது' எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க. 2. பொ-ரை: நீலகண்டனாய்க் காபாலக்கூத்து ஆடுபவனாய், கட்டங்கப் படையை ஏந்தியவனாய், நில உலகு விண் உலகு பாதாள உலகு இவற்றிற்கு ஒளிவழங்குபவனாய், வெள்ளிய பிறையைச் சூடியவனாய், நற்பண்புக்கு நிலைக்களனாய், தனக்கு நிகரில்லாத ஞான ஒளியை உடையவனாய், பார்வதி பாகனாய், தன்னை விரும்பும் அடியவர்களைத் தானும் விரும்பி, அவர்கள் வினைகளைப் போக்கும் சிறப்பான புகழ் ஒளியை உடையவனாய்த் திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே. கு-ரை: கார்ஒளிய - கரிதாகிய ஒளியினை உடைய. "கபாலி" என்புழியும் இரண்டனுருபு விரிக்க. பாரின்கண் உள்ள ஒளி, ஞாயிறு திங்கள் விண்மீன்கள். பாதலத்தில் உள்ளது இருளாகலின், "பாதாளனை" என்பதற்கு, 'அதன்கண் உள்ள இருளானவனை' என உரைக்க; 'ஒளியும் இருளும் அவனே' என்றதற்கு இவ்வாறு ஓதியருளினார். "பாதாளத் தானை" என்பது பாடம் அன்று. 'சூடிய' என்பதன் இறுதிநிலை தொகுத்தலாயிற்று. "ஓர் பண்பு" என்றது, சார்ந்தாரைக்காத்தலை. பேரொளி - எல்லா ஒளிகட்கும் முதலாய்
|