| 2769. | ஊன்கருவின் உள்நின்ற சோதி யானை | | | உத்தமனைப் பத்தர்மனம் குடிகொண் டானைக் | | | கான்திரிந்து காண்டீப மேந்தி னானைக் | | | கார்மேக மிடற்றானைக் கனலைக் காற்றைத் | | | தான்தெரிந்தங் கடியேனை யாளாக் கொண்டு | | | தன்னுடைய திருவடியென் தலைமேல் வைத்த | | | தீங்கரும்பைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத் | | | தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 4 |
| 2770. | தக்கனது பெருவேள்வி தகர்த்தா னாகித் | | | தாமரையான் நான்முகனுந் தானே யாகி | | | மிக்கதொரு தீவளிநீர் ஆகா சம்மாய் | | | மேலுலகுக் கப்பாலா யிப்பா லானை | |
4. பொ-ரை: உடம்பில் கருவாகி நின்ற உயிருக்குள் ஒளி வடிவாய் உள்ளவனாய், உத்தமனாய், அடியார் மனத்தில் உறைபவனாய், காட்டில் வேடனாய்த் திரிந்து அருச்சுனன் பொருட்டுக் காண்டீபம் என்ற வில்லினை ஏந்தியவனாய், கார்மேகம் போன்ற நீலகண்டனாய், கனலாகவும், காற்றாகவும் உள்ளானாய், தானே ஆராய்ந்துஅடியேனைத் தன் அடிமையாகக் கொண்டு தன்னுடைய திருவடிகளை என் தலைமேல் வைத்தகரும்பு போன்ற இனியனாய், திருமுது குன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே. கு-ரை: ஊன் - உடம்பு. அதனுள் நின்ற கரு, உயிர்; அதனுள் நின்ற சோதி இறைவன் என்க. கான் - காடு. காண்டீபம் - வில். 'காண்டீபம் ஏந்திக் கான் திரிந்தான்' என்க; இது செய்தது அருச்சுனன் பொருட்டு. தெரிந்து - உரிய பொழுதைத் தெரிந்து. அங்கு - அப்பொழுது; 'அங்கே' என்னும் தேற்றேகாரம் தொகுத்தலாயிற்று. அருள்பெறும் நிலையை உயிர்கள் அடையுமாயின் இறைவன் சிறிதும் தாழ்த்தல் இன்றி அப்பொழுதே அருளுவனாகலின், "அங்கு ஆளாக் கொண்டு, தன்னுடைய திருவடி என் தலைமேல் வைத்த" என்று அருளினார். 'தீங்கரும்பு' இன எதுகை. 'தீன்கரும்பை' எனப் பாடம் ஓதுவாரும் உளர். 5. பொ-ரை: தக்கனுடைய பெரிய வேள்வியை அழித்து, தாமரையில் உறையும் பிரமனும்தானேயாகி, ஐம்பூதங்களும், மேலுலகும், அதற்கு
|