| அக்கினொடு முத்தினையு மணிந்து தொண்டர்க் | | | கங்கங்கே அறுசமய மாகி நின்ற | | | திக்கினையென் திருமுதுகுன் றுடையான் தன்னைத் | | | தீவினையேன் அறியாதே திகைத்த வாறே. | 5 |
| 2771. | புகழொளியைப் புரமெரித்த புனிதன் தன்னைப் | | | பொன்பொதிந்த மேனியனைப் புராணன் தன்னை | | | விழவொலியும் விண்ணொலியு மானான் தன்னை | | | வெண்காடு மேவிய விகிர்தன் தன்னைக் | |
அப்பாலும் இப்பாலுமாய்ப் பரந்து, சங்கு மணியையும், முத்தையும் அணிந்து, அடியவர்களுக்கு அவர்களுடைய பக்குவ நிலைக்கு ஏற்ப ஆறு வைதிக சமயங்களாகிய வழியானவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே. கு-ரை: 'தாமரையானாகிய நான்முகன்' என்க. உம்மை, ஏனை இருவரையுங் கொள்ளநிற்றலின் எச்சம். மேலுலகுக்கு அப்பாலாய் இப்பாலுமாம் நிலையை அருளுவதே திருவுள்ளமாகலின், தக்கன் வேள்வி தகர்த்தது முதலியவற்றை எச்சமாக்கி அருளினார். அக்கு - எலும்பு. 'அக்கினையும் முத்தினையும் ஒப்ப அணிந்து' என்றது. வேண்டுதல் வேண்டாமை இன்மையைப் புலப்படுத்தி, அறுசமயத்தார்க்கு அருளும் அருள்வேறுபாட்டினால், அவன் கோட்டம் இலனாதலைத் தெரிவித்தற்பொருட்டு. "அறுசமயங்கள்" என்றது உட்சமயங்கள்; அவை (ப.50. பா.7 குறிப்புரை) குறிக்கப்பட்டன. சமயங்கள் அவரவரது அறிவு நிலைக்கு ஏற்ப அமைந்தனவாகலின், அவற்றால் அடையும் பயனும் வேறுபடுவவாயின; எனினும், 'இறைவன் உண்மை கொள்வார் அனைவரும் தொண்டரே' என்பது, "தொண்டர்க்கு" என்றதனால் பெறப்பட்டது. சேக்கிழார் நாயனாரும், திருஞானசம்பந்த சுவாமிகளது திருமணத்தில், "ஆறுவகைச் சமயத்தில் அருந்தவரும்" (தி.12 திருஞான. புரா.1252) வீடுபெற்றமை தெளிவித்தருளினார். திக்கு - கதி; அறுசமயத்தவர்க்கும் அவனே கதியாகலின், "அறுசமயம் ஆகி நின்ற திக்கு" என்று அருளிச்செய்தார். 6. பொ-ரை: புகழாகிய ஒளியை உடையவனாய், திரிபுரத்தை எரித்த தூயோனாய், பொன்னிறம் அமைந்த திருமேனியனாய், பழமையானவனாய்,
|