பக்கம் எண் :

1027
 
கழலொலியுங் கைவளையும் ஆர்ப்ப ஆர்ப்பக்

கடைதோறு மிடுபிச்சைக் கென்று செல்லுந்

திகழொளியைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

6

2772.போர்த்தானை யின்னுரிதோல் பொங்கப் பொங்கப்

புலியதளே உடையாகத் திரிவான் தன்னை

காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும்

காலனையுங் குரைகழலாற் காய்ந்தான் தன்னை

மாத்தாடிப் பத்தராய் வணங்குந் தொண்டர்

வல்வினைவே ரறும்வண்ணம் மருந்து மாகித்

தீர்த்தானைத் திருமுதுகுன் றுடையான் தன்னைத்

தீவினையேன் அறியாதே திகைத்த வாறே.

7


விண்ணின் பண்பாகிய ஒளியும் திருவிழாக்களில் கேட்கப்படும் ஒலியும் ஆகியவனாய், வெண்காட்டில் உறையும் விகிர்தனாய், கால்களில் அணிந்தகழல்களின் ஒலியும் கைவளைகளின் ஒலியும் சிறக்க வீடுகள் தோறும்பிச்சைக்கு என்று சஞ்சரிக்கும் மேம்பட்ட ஒளியை உடையவனாய், திருமுதுகுன்றத்தில் உறையும் பெருமானை, தீவினை உடைய நான் இதுகாறும் உள்ளவாறு அறியாமல் மயங்கிப் போனேனே.

கு-ரை: புகழ் ஒளி - யாவரும் புகழும் ஒளி. பொன் பொதிந்த - பொன்னை நிறைத்து வைத்தது போலும். புராணன் - பழையோன். விண் ஒலி - விண்ணினது பண்பாகிய ஒலி; அஃது எடுத்தோதிய விழவொலி ஒழித்து ஒழிந்த எல்லாவகை ஒலிகளையும் குறித்துநின்றது. "கைவளை" என்றது, கங்கணத்தை. பிட்சாடன வடிவத்தில் அழகிய அணிகளும் கொள்ளப்பட்டன என்க. கடைதோறும் - வாயில்கள் தோறும். திகழ்ஒளி - தானே விளங்கும் ஒளி.

7. பொ-ரை: யானையை உரித்த தோலைப் போர்த்துத் திருமேனியின் ஒளி சிறக்குமாறு புலித்தோலை உடுத்துத் திரிவானாய், பொறிவாயில் ஐந்தவித்தானாய், முப்புரங்களையும் வெகுண்டவனாய், காலனைத் திருவடியால் உதைத்தவனாய், மேம்பட்ட கூத்தினை நிகழ்த்துபவனாய், பத்தர்களாய் வணங்கும் அடியார்களுடைய வலிய வினைகளும், அவற்றால்