69. திருப்பள்ளியின் முக்கூடல் பதிக வரலாறு: வாகீசர், திருப்புகலூர் தொழும் விருப்புடையராய்த் திருவாரூரிலிருந்து பல பதிகளையும் வணங்கிச் செல்லுங்கால் திருப்பள்ளியின் முக்கூடல் பணிந்து பாடியருளியது இத் திருப்பதிகம். (தி.12திருநாவு. புரா. 230) குறிப்பு: இத்திருப்பதிகமும் மேலைத் திருப்பதிகம் போலவே அருளிச்செய்யப்பெற்றது. திருத்தாண்டகம் | ப. தொ. எண்: 282 | பதிக எண்: 69 |
திருச்சிற்றம்பலம் | 2776. | ஆராத இன்னமுதை அம்மான் தன்னை | | | அயனொடுமா லறியாத ஆதி யானைத் | | | தாராரும் மலர்க்கொன்றைச் சடையான் தன்னைச் | | | சங்கரனைத் தன்னொப்பா ரில்லா தானை | | | நீரானைக் காற்றானைத் தீயா னானை | | | நீள்விசும்பாய் ஆழ்கடல்க ளேழுஞ் சூழ்ந்த | | | பாரானைப் பள்ளியின்முக் கூட லானைப் | | | பயிலாதே பாழேநான் உழன்ற வாறே. | 1 |
1. பொ-ரை: தெவிட்டாத இனிய அமுதமாய்த் தலைவனாய், பிரமனும் திருமாலும் அறியாத முதலவனாய், கொன்றை மாலை அணிந்த சடையனாய், நன்மை தருபவனாய், ஒப்பற்றவனாய், நீராய், தீயாய், காற்றாய், நீண்ட வானமாய், ஆழ்ந்தகடல்கள் ஏழும் சூழ்ந்த நிலனாய்ப் பரந்து இருக்கும் பள்ளியின் முக்கூடலில் உறைகின்ற பெருமானைப் பலகாலும் சிந்திக்காமல், பயனில்லாமல் யான்தடுமாறித் திரிந்த செயல் இரங்கத்தக்கது. கு-ரை: ஆராத - நிறையாத; தெவிட்டாத. "நீரான்" முதலியவற்றிற்கு, 'நீராய் உள்ளவன் என்றாற்போல உரைக்க, பயிலுதல், ஈண்டு. 'நூலைப் பயிலுதல்' என்பது போலப் பலகாலும் சிந்தித்தல் முதலியன செய்து வழிபடுதல். "பாழ்" என்றது, ஆகுபெயராய் பயனில்லாத நெறியை
|