பக்கம் எண் :

1042
 
2787.ஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும்

ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர்

பேரூர் பிரமபுரம் பேரா வூரும்

பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங்

கூரார் குறுக்கைவீ ரட்டா னம்முங்

கோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங்

காரார் கழுக்குன்றுங் கானப் பேருங்

கயிலாய நாதனையே காண லாமே.

2


அருள்புரிகின்றானாதலின், இத் தலங்களில் எல்லாம், "கயிலாய நாதனையே காணலாமே" என்று அருளிச் செய்தார். ஏகாரங்கள் இரண்டனுள் முன்னையது பிரிநிலை; பின்னையது தேற்றம். இதனால், 'சிவபிரானை, நிலவுலகத்தில் எவ்விடத்து எவ்வுருவில் எவ்வாறு கண்டு வழிபடினும், அவ்விடத்தைத்திருக் கயிலையாகவும், ஆங்கு விளங்கும் இறைவனைக் கயிலைத் தலைவனாகவும் கருதி வழிபடுதல் வேண்டும்' என்பது பெறப்பட்டது. இது, சமய தீக்கைக்கண்ணே வலியுறுத்தப்படுகின்றது; ஆயினும், அதற்கு மேற்பட்ட தீக்கை முதலியவற்றை அடைந்தோர்க்கும் யாவர்க்கும் இதுவே நெறி என்பதே திருமுறைகளின் முடிபு. 'திருக்கயிலையை நேர்படக் கண்டுவழிபடும் வழிபாடே நிலவுலகில் சிவபிரானை நேர்படக்கண்டு வழிபடும் வழிபாடு' என்பதனானே, நாயனார், இவ்வுடல்மாளுதற்கு முன் எவ்வாறேனும் திருக்கயிலையைக் கண்டு வழிபடுதல் வேண்டும் என்னும் உறைப்புடன் எத்துணை இடையூறுகளாலும் மனம்பின்னிடையாது கயிலைநோக்கிச் செவ்வனஞ் சென்று கொண்டே இருந்தார். ஆயினும், அவர் வாயிலாக அருளிச்செய்ய வேண்டிய இன்றியமையாத அரும் பெருந்திருப்பதிகங்கள் அதுகாறும் அருளிச் செய்யப்படாதிருந்தமையின், அவைகளை அருளுவித்தற் பொருட்டு அவரை இறைவன் இடைவழியினின்றும் மீள எளிதில் தமிழ்நாடு போதரச்செய்தான் என்க.

2. பொ-ரை: ஆரூர் மூலட்டானம், ஆனைக்கா, ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம், ஆவூர், பேரூர், பிரமபுரம், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர், எல்லோரும் விரும்பும் சிறப்புமிக்க குறுக்கை வீரட்டம், கோட்டூர், குடமூக்கு, கோழம்பம், மேகங்கள் தங்கும் கழுக்குன்றம், கானப்பேரூர்..... இவற்றில்கயிலாய நாதனைக் காணலாம்.

கு-ரை: ஆரூர் மூலட்டானம், ஆனைக்கா, ஆக்கூர்த் தான்