பக்கம் எண் :

1043
 
2788.இடைமரு தீங்கோ யிராமேச் சரம்

இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர்

சடைமுடி சாலைக் குடிதக்களூர்

தலையாலங் காடு தலைச்சங் காடு

கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர்

கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு

கடைமுடி கானூர் கடம்பந் துறை

கயிலாய நாதனையே காண லாமே.

3


தோன்றிமாடம், ஆவூர், பிரமபுரம், குறுக்கை வீரட்டானம், கோட்டூர், குடமூக்கு, கோழம்பம் இவை சோழநாட்டுத்தலங்கள். பிரமபுரம் - சீகாழி. குடமூக்கு - கும்பகோணம். பேணும் கூரார் - வழிபடும் அன்பு மிக்கவர்களையுடைய.

கழுக்குன்று, தொண்டைநாட்டுத் தலம். கார் ஆர் - மேகம் படியும்.

கானப்பேர், பாண்டிநாட்டுத் தலம்.

பேரூர், பேராவூர், பெருந்துறை, காம்பீலி, பிடவூர் இவை வைப்புத் தலங்கள்.

3. பொ-ரை: இடைமருது, ஈங்கோய், இராமேச்சரம், இன்னம்பர், ஏர்இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொடுமுடி, குற்றாலம், கொள்ளம் பூதூர், கோத்திட்டை, கோட்டாறு, கோட்டுக்காடு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம்.

கு-ரை: இடைமருது, ஈங்கோய், இன்னம்பர், தலையாலங்காடு, தலைச்சங்காடு, கொள்ளம் பூதூர், கோட்டாறு, கடைமுடி, கானூர், கடம்பந்துறை இவை சோழநாட்டுத் தலங்கள்.

இராமேச்சரம், குற்றாலம் இவை பாண்டி நாட்டுத் தலங்கள்.

கொடுமுடி - பாண்டிக்கொடுமுடி; இதுகொங்குநாட்டுத் தலம்.

ஏர் - அழகு. இடவை, ஏமப்பேறூர், சடைமுடி, சாலைக்குடி, தக்களூர், கோத்திட்டை, கோட்டுக்காடு இவை வைப்புத்தலங்கள்.