பக்கம் எண் :

1044
 
2789.எச்சி லிளமர் ஏம நல்லூர்

இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி

அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர்

ஆவடு தண்டுறை யழுந்தூர் ஆறை

கைச்சினங் கற்குடி கச்சூர் ஆலக்

கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி

கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங்

கயிலாய நாதனையே காண லாமே.

4


4. பொ-ரை: எச்சில் இளமர், ஏமநல்லூர், இலம்பையங் கோட்டூர், இறையான்சேரி, அச்சிறுபாக்கம், அளப்பூர், அம்பர், ஆவடுதுறை, அழுந்தூர், ஆறை, கைச்சினம், கற்குடி, கச்சூர், ஆலக்கோயில், கரவீரம், காட்டுப்பள்ளி, கச்சிப்பலதளி, ஏகம்பம்.... இவற்றில்கயிலாய நாதனைக் காணலாம்.

கு-ரை: அம்பர், ஆவடுதுறை, அழுந்தூர், கைச்சினம், கற்குடி, கரவீரம், காட்டுப்பள்ளி இவை சோழநாட்டுத் தலங்கள். "அம்பர்" என்றதனால், 'அம்பர்ப் பெருந்திருக்கோயில், அம்பர்மாகாளம்' என்னும் இரண்டனையும், "காட்டுப்பள்ளி" என்றதனால், 'மேலைக் காட்டுப்பள்ளி, கீழைக் காட்டுப்பள்ளி' என்னும் இரண்டனையுங் கொள்க.

இலம்பையங்கோட்டூர், அச்சிறுபாக்கம், கச்சூர் ஆலக்கோயில், ஏகம்பம் இவை தொண்டை நாட்டுத்தலங்கள். "கச்சி" என்றதனை, ஏகம்பத்திற்குங்கூட்டுக. 'கச்சி' என்பது தலத்தின் பெயரும், 'ஏகம்பம்' என்பது, கோயிலின் பெயருமாம். 'ஏகம்பம்' என்னும் பெயர்பற்றி மேலே (ப.44. பா.5.) குறிப்பிடப்பட்டது.

எச்சிலிளமர், ஏம நல்லூர், இறையான்சேரி, அளப்பூர், ஆறை, கச்சிப் பல தளி இவை வைப்புத் தலங்கள்.தளி - கோயில். கச்சித் தலத்தில் ஏகம்பமே யன்றி எண்ணிறந்த கோயில்கள் உளவாதலின், அவை எல்லாவற்றையும், "கச்சிப் பலதளி" என்று அருளிச்செய்தார். "எச்சி லிளமர்" என்பதேயன்றி, 'எச்சிலிளவர்' எனவும் பாடம் ஓதுப.