| 2790. | கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர் | | | கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும் | | | நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவு | | | நின்றியூர் நீடூர் நியம நல்லூர் | | | இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர் | | | எறும்பியூர் ஏராரு மேம கூடங் | | | கடம்பை யிளங்கோயில் தன்னி னுள்ளுங் | | | கயிலாய நாதனையே காண லாமே. | 5 |
| 2791. | மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் | | | வக்கரை மந்தாரம் வார ணாசி | | | வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி | | | விளமர் விராடபுரம் வேட்க ளத்தும் | |
5. பொ-ரை: கொடுங்கோளூர், அஞ்சைக்களம், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், குரக்குக்கா, நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர், நீடூர், நியமநல்லூர், இடும்பாவனம், எழுமூர், ஏழூர், தோழூர், எறும்பியூர், அழகிய ஏமகூடம், கடம்பை இளங்கோயில்.... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம். கு-ரை: அஞ்சைக்களம், மலைநாட்டுத்தலம். குரக்குக்கா, நெடுங்களம், நன்னிலம், நெல்லிக்கா, நின்றியூர் நீடூர், இடும்பாவனம், எறும்பியூர், கடம்பை, இளங்கோயில் இவை சோழநாட்டுத்தலங்கள். கடம்பை - கடம்பூர். இளங்கோயில் - மீயச்சூர் இளங்கோயில். கொடுங்கோளூர், செங்குன்றூர், கொங்கணம், குன்றியூர், நியமநல்லூர், எழுமூர், ஏழூர், தோழூர், ஏமகூட மலை இவை வைப்புத் தலங்கள். எழுமூர் -தஞ்சை எழுமூர். ஏர் ஆரும். அழகு நிறைந்த. 'ஏராறும்' என்பது பாடம் அன்று. 6. பொ-ரை: மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வக்கரை, மந்தாரம், வாரணாசி, வெண்ணி, விளத்தொட்டி, வேள்விக்குடி, விளமர், விராடபுரம், வேட்களம், பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை, பெண்ணாகடம், பிரம்பில், பெரும்புலியூர், பெரு வேளூர், கண்ணை, களர், காறை, கழிப்பாலை, முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம்.
|