| பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம் | | | பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங் | | | கண்ணை களர்காறை கழிப்பா லையுங் | | | கயிலாய நாதனையே காண லாமே. | 6 |
| 2792. | வீழி மிழலைவெண் காடு வேங்கூர் | | | வேதிகுடி விசய மங்கை வியலூர் | | | ஆழி யகத்தியான் பள்ளி யண்ணா | | | மலையாலங் காடும் அரதைப் பெரும் | | | பாழி பழனம்பனந் தாள்பா தாளம் | | | பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண் | | | காழி கடல்நாகைக் காரோ ணத்துங் | | | கயிலாய நாதனையே காண லாமே. | 7 |
கு-ரை: மண்ணிப்படிக்கரை, வாழ்கொளிபுத்தூர், வெண்ணி, வேள்விக்குடி, விளமர், வேட்களம், பெரும்புலியூர், பெருவேளூர், களர், கழிப்பாலை இவை சோழநாட்டுத் தலங்கள். 'வாள்கொளி புத்தூர்' என்பதும் பாடமாகக் கொள்வர். வெண்ணி - வெண்ணியூர். வக்கரை, தொண்டை நாட்டுத் தலம். அருட்டுறை, பெண்ணாகடம் இவை நடு நாட்டுத்தலங்கள். 'அருட்டுறை' என்பது திருவெண்ணெய் நல்லூர்க்கோயிலின் பெயர். 'பெண்ணை' என்பது அத்தலத்தை அடுத்து ஓடும் ஆற்றின் பெயர். மந்தரமலை, வாரணாசி, விளத்தொட்டி, விராடபுரம், பிரம்பில், கண்ணை, காறை, இவை வைப்புத்தலங்கள். 'மந்தரம்' என்பது 'மந்தாரம்' என நீட்டலாயிற்று; அன்றி, அவ்வாறே பெயர் பெற்றதொரு வைப்புத் தலம் உண்டெனின், கொள்க. 7. பொ-ரை: வீழிமிழலை, வெண்காடு, வேங்கூர், வேதிகுடி, விசயமங்கை, வியலூர், ஆழி, அகத்தியான்பள்ளி, அண்ணாமலை, ஆலங்காடு, அரதைப் பெரும்பாழி, பழனம், பனந்தாள், பாதாளம், பராய்த்துறை, பைஞ்ஞீலி, பனங்காட்டூர், காழி, கடற்கரையை அடுத்த நாகைக்காரோணம் .... ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம்.
|