| 2793. | உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் | | | உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும் | | | மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் | | | வீரட்டம் மாதானங் கேதா ரத்தும் | | | வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா | | | வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும் | | | கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங் | | | கயிலாய நாதனையே காண லாமே. | 8 |
கு-ரை: வீழிமிழலை, வெண்காடு, வேதிகுடி,விசயமங்கை, வியலூர், அகத்தியான்பள்ளி, அரதைப்பெரும்பாழி, பழனம், பனந்தாள், பாதாளம், பராய்த்துறை, பைஞ்ஞீலி, நாகைக் காரோணம் இவை சோழநாட்டுத் தலங்கள். ஆழி- கடல் 'ஆழியை அடுத்த அகத்தியான் பள்ளி' என்க.பாதாளம் - பாதாளேச்சுரம். காழி - சீகாழி; இதுமேலும் அருளிச்செய்யப்பட்டது. நாகை - நாகப்பட்டினம்; அதன்கண் உள்ள திருக்கோயிலின் பெயர். காரோணம். அண்ணாமலை, நடுநாட்டுத் தலம். ஆலங்காடு, தொண்டை நாட்டுத் தலம். வேங்கூர், பனங்காட்டூர் இவை வைப்புத்தலங்கள். 'வெங்கூர்' என்பதும் பாடம். தொண்டைநாட்டுத் தலங்களுள் ஒன்றாய் விளங்கும், 'வன்பார்த்தான் பனங்காட்டூர்' என்பது வேறு. 8. பொ-ரை: உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திர கோடி, மறைக்காடு, மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர்வீரட்டம், மாதானம், கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை.... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக்காணலாம். கு-ரை: ஊறல், ஓத்தூர் இவை தொண்டை நாட்டுத்தலங்கள். மறைக்காடு, மீயச்சூர், வைகா, கஞ்சனூர் இவை சோழ நாட்டுத் தலங்கள். மேற்சொல்லப்பட்ட இளங்கோயில் (பா.5.) மீயச்சூரிலுள்ள மற்றொரு திருக்கோயில்; அது மூலட்டான மூர்த்தி பாலாலயத்துள் இருந்த பொழுதுபாடப்பட்ட இடம் என்பர். வைகா - வைகாவூர்.
|